துணைக்கோள் நகரமாகும் ( Satellite city ) மாமல்லபுரம்.

துணைக்கோள் நகரமாகும் ( Satellite city ) மாமல்லபுரம்.

சிற்பக் கலைகளிலும் ,வரலாற்றிலும் புகழ்பெற்ற மாமல்லபுரம் ஈசிஆர் எனப்படும் கிழக்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது.

துணைக்கோள் நகரம் என்றால் என்ன? ஏன் குறிப்பாக மாமல்லபுரத்தில் அமைக்க வேண்டும்.

வளர்ந்து வரும் ஊர்களான செங்கல்பட்டு ,கூடுவாஞ்சேரி ,தாம்பரம் ,வண்டலூர் அருகாமையில் உள்ளதால் மாமல்லபுரத்தை துணைக்கோள் நகரமாக அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது நான்கு வழி சாலையாக அமைய உள்ளது. அதற்கான சாலை விரிவடைவதற்கான பணியும் தொடங்கி விட்டது.

அது மட்டுமில்லாமல் சென்னை முதல் மாமல்லபுரம் வரை ரயில்வே வசதிகள் கொண்டு வரவும் முடிவெடுத்துள்ளனர்.

இவ்வாறு தான் திருமழிசை ஒரு வளர்ச்சி அடைந்த பேரூராட்சி ஆக மாறி உள்ளது. அரசு பல இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கொண்டு வந்து அதில் வேலை பார்ப்பவர்களுக்கு அதன் அருகாமையிலே மக்களின் அடிப்படை வசதியான குடிநீர், குடியிருக்க வீடுகள், பேருந்து, ரயில்வே நிலையம்,மருத்துவ வசதிகளை கொண்டு வந்து வளர்ச்சி அடைய செய்தது.

அதேபோல் சென்னையில் மிரள வைக்கும் சாலை டிராபிக்கை கட்டுப்படுத்த அரசு துணைக்கோள் நகரம் அமைக்க முடிவு எடுத்துள்ளது .

மக்கள் தன் அடிப்படை தேவைக்காக நகரம் நோக்கி அலை எடுத்து வருவதால் டிராபிக் நெரிசல் ஏற்படுகிறது .

நகரத்தில் உள்ள விலைவாசிகளும் மக்களை அச்சுறுத்துகின்றது .
ஆகையால் மாமல்லபுரத்தில் பல தொழில் வாய்ப்புகளை கொண்டு வந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து அவற்றை துணைக்கோள் நகரமாக மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது.

இதனால் மாமல்லபுரம் துணைக்கோள் நகரமாக மாறுவதில்லாமல் மக்களும் சிட்டி டிராபிக்கில் இருந்து கஷ்டப்பட தேவையில்லை.