நன்மைகள் நிறைந்த கோவைக்காய்.. இதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

கிராமப்புறங்களில் சாலை ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. கோவைக்காயின் முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உணவிற்கும் மருத்துவத்திற்கும் பயனுள்ள மூலிகையாக கோவை விளங்குகின்றது. தாய்ப்பால் பற்றாத இளம் தாய்மார்கள் கோவைக்காய் உண்ண பால் சுரக்கச் செய்யும். கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல், நோய்களும் மேற்பூச்சு … Read more

புரட்சித்தலைவி அம்மாவின் வேதா இல்லம்.

வேதா இல்லம்.

புரட்சித்தலைவி அம்மாவின் வேதா இல்லம். சென்னையில் புகழ்பெற்ற போயஸ் கார்டனில், 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டவை தான் இந்த வேதா இல்லம். புரட்சித்தலைவி பெரும்பாலும் தன் நேரங்களை கழித்தது இந்த இல்லத்தில் தான். அவர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் இருந்து இந்த இல்லத்தில் தான் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். அதே இல்லத்தில் தான் தன் சகோதரரின் திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பல பிரதமர்கள் , தேசிய தலைவர்கள் வரவேற்ற இடம் தான் வேதா இல்லம். பெரும்பாலும் புரட்சித்தலைவி … Read more

எகிப்து தேவதை கிளியோபாட்ராவின் மரணம்.. இன்று வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு

cleopatra

இந்த உலகத்தில் நாம் இதுவரை பல்லாயிரக்கணக்கான அழகிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் வரலாற்றில் இன்று வரை நிலைத்து நிற்கும் பேரழகி தான் கிளியோபாட்ரா. இவரை பற்றி கூறினாலே நம் நினைவுக்கு வருவது பாலில் குளிப்பவர், கண்களுக்கு பிரத்தேகமாக வண்ண மைகளை கொண்டு அலங்காரம் செய்பவர், தன்னுடைய அழகை பராமரிக்க பல செலவு செய்பவர் இது போன்ற விஷயங்கள் தான். உண்மையில் கிளியோபாட்ரா பேரழகி மட்டுமல்ல, சிறந்த புத்தி கூர்மையும் … Read more

பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட கொடூரமான தண்டனைகள்.. குலை நடுங்க வைக்கும் வரலாறு

punishments

பொதுவாக அந்த காலத்தில் அரசர்கள் அனைவரும் நாட்டு மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க சில கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றி வந்தனர். அதில் முக்கியமானது தவறு செய்பவர்களுக்கு கொடுக்கும் கொடூரமான தண்டனை தான். நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் அந்த தண்டனைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம். கழுவேற்றுதல் பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட மிகக் கொடூரமான தண்டனைகளில் இதுவும் ஒன்று. கழுவேற்றுதல் என்பது தவறு செய்யும் நபரை கூரான முனை கொண்ட ஒரு ஆயுதத்தின் மேல் … Read more

சென்னையில் தனியாக செல்லக்கூடாத இடங்கள்.. சினிமாவை மிஞ்சிய அமானுஷ்யங்கள்

தமிழ்நாடு என்று சொன்னாலே பல அழகிய சுற்றுலா தளங்களும் வியக்க வைக்கும் கட்டிடக்கலைகளும் தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் தலைநகரான சென்னையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றது. அந்த வகையில் சென்னைக்கு பல முகங்கள் இருக்கிறது எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரமாக இருந்தாலும், பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் இங்கு ஏராளமாக இருக்கிறது. அந்த வகையில் சென்னைக்கு எப்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக தான் இருக்கும். ஆனால் பலருக்கும் தெரியாத சில … Read more

மலைகளின் இளவரசியான வால்பாறை.. கோடைக்கு ஏற்ற சிறந்த சுற்றுலாத்தலம்

பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே பலரும் ஏதாவது ஒரு மலை சார்ந்த குளிர் பிரதேசத்தை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அதில் மலைகளின் இளவரசி என்றும் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படும் வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் நம் கண்ணைக் கவரும் ஏகப்பட்ட இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1193 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. … Read more

இந்த ஐடியா நமக்கு தோனாமா போச்சே! வாழ்வை விற்று ஜாலியாக கல்லா கட்டும் நபர்!

நாம் நம் வாழ்நாளில் எவற்றையெல்லாம் விற்போம் என்று யோசித்தால், பெரும்பாலும் பொருட்களும், நம் உழைப்பும் தான் என்ற பதில் கிட்டும். கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாம் வளரக்கும் கால்நடைகளை கூறுவோம். அதனினும் அதிகபட்சமாக நமது உடல் பாகங்கள் என்ற பதிலும் சில சமயங்களில் எட்டிப்பார்க்கும். ஆனால், இங்கே ஒருவர் தனது வாழ்வை வித்தியாசமான முறையில் விற்பனை செய்திருக்கிறார். விந்தையாக இருக்கிறதா? அதான் உண்மை. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக அவரை அவரே இணையதளத்தில் விற்றுள்ளார். ஆம், அதுவும் அவரை … Read more

வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற உடை அணிகிறார்கள்?.. காரணமும், பின்னணியில் உள்ள வரலாறும்

சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளம் இருக்கும். ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு நிறத்தில் உடை இருக்கும். அந்த உடை கண்ணியம் மற்றும் தொழில்முறையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. உதாரணமாக மருத்துவர்கள் வெள்ளை நிற கோட், காவலர்கள் காக்கி நிற உடையும் அணிவார்கள். அதேபோன்று நீதிக்கு துணை நிற்கும் வழக்கறிஞர் மற்றும் நீதிபதி ஆகியவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடை அணிவது வழக்கம். அதற்குப் பின்னால் சில வரலாறுகளும் இருக்கிறது. … Read more

தஞ்சாவூரில் இருந்து கொண்டு இந்த இடம் தெரியவில்லையா?

தஞ்சை அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூரில் உள்ள ஒரு அரண்மனையாகும். இந்த அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கிபி 1674 இல் இருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. இந்த அரண்மனை வளாகத்தில் தான் சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசு பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இந்த அரண்மனையானது நாயக்க மன்னர்களான … Read more

2000 ஆண்டுகளாக திமிருடன் நிற்கும் கல்லணை.. ஆங்கிலேயனையே மிரள வைத்த கரிகாலச் சோழன்

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஒரு அணையாக பார்க்கப்படுவது இந்த கல்லணை. கரிகால் சோழன் என்ற முதல் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்ற சோழ மன்னனால் இந்த கல்லணை கட்டப்பட்டது. சுமார் 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த கல்லணை நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. வெறும் கல்லும், களிமண்ணையும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கும் மேல் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி இருப்பது … Read more