தமிழ்நாடு என்று சொன்னாலே பல அழகிய சுற்றுலா தளங்களும் வியக்க வைக்கும் கட்டிடக்கலைகளும் தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் தலைநகரான சென்னையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றது.
அந்த வகையில் சென்னைக்கு பல முகங்கள் இருக்கிறது எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரமாக இருந்தாலும், பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் இங்கு ஏராளமாக இருக்கிறது. அந்த வகையில் சென்னைக்கு எப்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக தான் இருக்கும்.
ஆனால் பலருக்கும் தெரியாத சில அமானுஷ்யமான இடங்களும் சென்னையில் இருக்கின்றது. இப்போதும் கூட அந்த இடங்களுக்கு தனியாக செல்ல மக்கள் பயந்து நடுங்குவார்கள். ஆனால் சில துணிச்சல் காரர்கள் அல்லது சாகசத்தை விரும்புவோர்கள் வேண்டுமானால் பின்வரும் இடங்களுக்கு சென்று பரிசோதித்து பார்க்கலாம்.
பெசன்ட் நகர், உடைந்த பாலம் சென்னை சாந்தோம் கடற்கரையை எலியா கடற்கரையோடு இணைக்கும் விதத்தில் கட்டப்பட்டது தான் இந்த பாலம். 1967இல் கட்டப்பட்ட இந்த பாலத்தை பல வருடங்கள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த கடல் கொந்தளிப்பால் அந்தப் பாலம் இடிந்து விழுந்தது.
அதன் பிறகு அந்த இடத்தில் மர்மங்கள் சூழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது மேலும் அடையாளம் காணப்படாத பல உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கிறது இதனால் அந்த இடத்தில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் இரவில் அளவு அதிகமாக சத்தம் கேட்பதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். அதனால் அந்த இடத்திற்கு இருட்டிய நேரத்தில் யாரும் செல்வது கிடையாது.
Also read: வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்கரை
டிமான்டி காலனி இதைப் பற்றி நாம் ஒரு திரைப்படத்தில் பார்த்திருப்போம். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அபிராமிபுரம் நகருக்கு அருகில் தான் இந்த டிமான்டி காலனி இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பவுத்துக்கீஸியா வணிகர் டிமான்டி என்பவர் இங்கு தன் மனநலம் சரியில்லாத மனைவியுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவருடைய குழந்தை மர்மமாக இறந்து விட்டதாகவும் அதன் பிறகு அந்த இடத்தில் பல மர்மங்கள் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போதும் கூட அந்த காலணியில் டிமான்ட்டியின் உருவம் சுற்றுவதாகவும் அந்த வீட்டின் நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் ஒரு சில மக்கள் பார்த்திருக்கிறார்களாம். மேலும் அங்கு செக்யூரிட்டியாக இருந்தவரும் இறந்து விட்டதால் தற்போது மக்கள் அந்த ஏரியா பக்கமே செல்வதில்லையாம்.
கரிக்காட்டுக்குப்பம் கடந்த 2004 ஆம் ஆண்டு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சுனாமி பேரலை ஒரு மீனவ கிராமத்தையே முற்றிலும் அழித்துவிட்டது. அந்த சம்பவத்தால் பல மக்கள் வீடுகளை இழந்து உறவுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் இந்த கறிக்காட்டு குப்பம் பல சேதங்களை சந்தித்தது அந்த சம்பவத்தினால் இறந்து போன மனிதர்களின் ஆவி எப்போதும் அந்த இடத்தை சுற்றி வருவதாக பேசப்படுகிறது. மேலும் அங்கு இருக்கும் ஒரு கோவிலில் எப்போதும் ரத்த துளிகள் இருப்பதாகவும் சில இறந்த உடல்களின் பாகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் அந்த இடத்தையே தற்போது திகிலுடன் பார்த்து வருகின்றனர்.
எப் 2 கட்டிடம் சென்னையில் அமானுஷ்யம் நிறைந்த இடங்களில் இதுவும் ஒன்று. சென்னை விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் இருக்கிறது. அங்கிருக்கும் ஒரு வீட்டில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
Also read: சர்ச்சை இயக்குனரை டீலில் விட்ட டாப் ஹீரோக்கள்.. ஆதரவு கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்
அந்த பெண்ணின் ஆதி இப்போதும் வீட்டிற்குள் சுற்றி வருவதாகவும் அங்கிருந்து பல சத்தங்கள் வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் அந்த வீட்டை தாண்டி செல்லும்போது மொபைல் நெட்வொர்க் முற்றிலும் செயலிழந்து விடுவதாகவும் தானாகவே போனில் டார்ச் ஆன் ஆவதாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு ஏன் கூகுளில் இந்த இடத்தைப் பற்றி நீங்கள் சர்ச் செய்தால் ஹன்டட் ஸ்பாட் என்று தான் வரும்.
தியோசாபிகல் சொசைட்டி பல வருடங்களுக்கு முன்பு அடையாறில் நிறுவப்பட்ட இந்த இடத்தில் 450 ஆண்டுகள் பழமையான ஒரு ஆலமரம் இருக்கிறது. அந்த மரத்தில் சூரிய மறைவிற்கு பிறகு அலறல் சத்தம் கேட்பதாகவும். சில பெயர்களை கூறி அழைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அந்த இடத்திற்கு மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் செல்வது கிடையாது. சென்னையில் இருக்கும் பயங்கரமான இடங்களில் இந்த ஆல மரமும் ஒன்று.
மேற்கண்ட இந்த இடங்களை அமானுஷ்யன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் சோதித்து பார்க்க வேண்டும் என்றால் தாராளமாக செய்யலாம். ஆனால் எதற்கும் ஒரு முறை யோசித்துக் கொள்வது நல்லது.
1 Comment