சினிமா

சர்ச்சை இயக்குனரை டீலில் விட்ட டாப் ஹீரோக்கள்.. ஆதரவு கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இவருடைய டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலித்ததை தொடர்ந்து அடுத்து வெளியான டான் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் இவருக்கு தோல்வியை கொடுத்தது.

இருந்தாலும் இவரை வைத்து படத்தை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.

அதிலும் இவருடைய இயக்கத்தில் வெளியான சர்க்கார் படத்தின் கதை மற்றொருவருக்கு சொந்தமானது என்று கிளம்பிய விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஏகப்பட்ட கதை திருட்டு பிரச்சனையில் இவர் சிக்கினார். அதனாலேயே இப்போது இருக்கும் டாப் ஹீரோக்கள் யாரும் இவரின் இயக்கத்தில் நடிக்க யோசித்து வருகின்றனர்.

கடைசியாக தர்பார் திரைப்படத்தை இயக்கி இருந்த இவருக்கு அந்த படமும் கை கொடுக்கவில்லை. அதனால் விஜய் மற்றும் சிம்பு ஆகியோரிடம் இவர் அடுத்த படத்திற்கான கால்ஷூட் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களும் தோல்வி பயத்தில் இவரை நிராகரித்து விட்டனர். அதன் பிறகு இவர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை கூறி இருக்கிறார்.

அதில் இம்ப்ரஸ் ஆன சிவகார்த்திகேயன் தற்போது அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதனால் குஷியில் இருக்கும் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்தே தீருவேன் என்ற ஆர்வத்தில் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறாராம். அவருடைய இந்த முயற்சி எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.