குழந்தை போல குதூகலிக்க வைக்கும் நீர்வீழ்ச்சி.. கேரளாவில் எங்கு இருக்கு தெரியுமா.?

kerala vagamon

கேரளாவில் கோட்டயம் என்னும் பகுதியில் இரு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவை அருவிக்குழி நீர்வீழ்ச்சி மற்றும் வாகமன் நீர்வீழ்ச்சி. முதலில் அருவிக்குழி நீர்வீழ்ச்சி பற்றி பார்ப்போம். இந்த நீர்வீழ்ச்சி கண்ணைக்கவரும் அழகோடு காட்சியளிக்கும். இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி குமரகம் அருகிலேயே உள்ளது. கோட்டையம் நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் குமரகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி பகுதி, இயற்கை சூழலில் நடைபயணம் மேற் கொள்வதற்கு ஏற்ற இடமாகும். இந்த நீர்வீழ்ச்சியில் 100 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்ட … Read more

மூன்று முக்கிய நாடுகளை இணைக்கும் உலகின் மிக நீளமான ரயில் பயணம்!

trainjourney

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து விளாடிவோஸ்டோக் நகர் வரை செல்கிறது டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை. இந்த டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை 9,289 கிலோமீட்டர் தூரம் வரை அமைந்துள்ளது. உலகின் மிக நீளமான இந்த ஒரே பாதை ஐரோப்பிய ஆசிய கண்டங்களை இணைக்கிறது. ரயில் பிரயானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்த படியே, ஹெட்போனில் பாடல் கேட்டு செல்வது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அந்த வகையில், இந்த டிரான்ஸ்-சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மேற்கே தொடங்கி … Read more

தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களும்.. அதன் பெருமைகளும்..

நம் நாட்டின் தெற்குப் பகுதி எவ்வளவு கலாச்சாரம் மற்றும் அழகானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தென்னிந்தியாவின் மகத்துவத்தை விவரிக்கும் ஒரு மாநிலம் இருக்க வேண்டும் என்றால் அது தமிழகமாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மையுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த மாநிலம், பாரம்பரிய நாகரிகத்தின் தாயகம் ஆகும், இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் அவர்களின் இரண்டாயிரம் ஆண்டு பழமையான கலாச்சாரம், மரபுகள் மற்றும் கலை ஆகியவற்றைப் பாதுகாத்து வளர்த்து வருகிறது. தமிழகம் கொடையும், பன்முகத்தன்மையும் கொண்ட மாநிலமாக … Read more

வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை இந்தியாவின் வங்காள விரிகுடாவில் பூங்கார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கையான மற்றும் பழமையான கடற்கரை ஆகும். இக்கடற்கரை காவேரி ஆற்றில் இருந்து  தொடங்கி வடக்கே நெய்தவாசல் வரை மூனு கிலோமீட்டர் நீண்டு செல்கிறது. இந்த கடற்கரையின் மணல் 3 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து உள்ளது. சமீபத்தில் கடல் அரிப்பை தடுக்க கரையோரத்தில் கிரானைட் கற்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடற்கரை மற்றும் பூம்புகார் நகரம் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு … Read more

குழந்தைகளுடன் ஊட்டிக்கு அருகில் பார்க்க வேண்டிய 10 அற்புதமான இடங்கள்

மூடுபனி மலைகள், பளபளக்கும் ஆறுகள், அடர்ந்த காடுகள், மற்றும் மிகவும் மகிழ்ச்சியான வானிலை. இந்தியாவின் தெற்கு நிலப்பரப்பு வழங்காதது எதுவுமில்லை. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஊட்டிக்கு அருகில் பார்க்க வேண்டிய இந்த அற்புதமான இடங்கள் அனைத்திலும் தெற்கில் உள்ள மிக அழகிய இடங்களின் சிறந்த உதாரணத்தை நீங்கள் காணலாம். தேயிலை தோட்டங்கள், மேகங்கள் சூழ்ந்த மலைகள் மற்றும் பசுமையான பசுமையுடன் ஊட்டி ஒரு கவர்ச்சிகரமான இடமாக இருந்தாலும், அருகிலுள்ள இந்த இடங்களும் ஏமாற்றமடையாது. உண்மையில், இந்த இடங்கள் பல, … Read more

கோடை காலத்திற்கு ஏற்றது இந்த கடற்கரை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த விழிஞ்சம் இயற்கை துறைமுகத்தின் அருகில் உள்ளது பூவார் கிராமம். பூவார் என்பது தென்னிந்தியாவின் ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்த கிராமம் கடற்கரை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பூவார் பீச் பயணிகள் இடையே மிகப் பிரபலமானது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தன மரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது. பூவார் கிராமம் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருவதற்கு … Read more

மலைகளின் இளவரசியான வால்பாறை.. கோடைக்கு ஏற்ற சிறந்த சுற்றுலாத்தலம்

பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே பலரும் ஏதாவது ஒரு மலை சார்ந்த குளிர் பிரதேசத்தை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அதில் மலைகளின் இளவரசி என்றும் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படும் வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் நம் கண்ணைக் கவரும் ஏகப்பட்ட இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1193 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. … Read more

கங்கைகொண்ட சோழபுரத்தின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கும் திருபுவனமா தேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கிபி 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் கிடைத்தது. தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப் போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரை போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி … Read more

தஞ்சாவூரில் இருந்து கொண்டு இந்த இடம் தெரியவில்லையா?

தஞ்சை அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூரில் உள்ள ஒரு அரண்மனையாகும். இந்த அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கிபி 1674 இல் இருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. இந்த அரண்மனை வளாகத்தில் தான் சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசு பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இந்த அரண்மனையானது நாயக்க மன்னர்களான … Read more

2000 ஆண்டுகளாக திமிருடன் நிற்கும் கல்லணை.. ஆங்கிலேயனையே மிரள வைத்த கரிகாலச் சோழன்

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஒரு அணையாக பார்க்கப்படுவது இந்த கல்லணை. கரிகால் சோழன் என்ற முதல் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்ற சோழ மன்னனால் இந்த கல்லணை கட்டப்பட்டது. சுமார் 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த கல்லணை நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. வெறும் கல்லும், களிமண்ணையும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கும் மேல் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி இருப்பது … Read more