தஞ்சாவூரில் இருந்து கொண்டு இந்த இடம் தெரியவில்லையா?

தஞ்சை அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூரில் உள்ள ஒரு அரண்மனையாகும். இந்த அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கிபி 1674 இல் இருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது.

இந்த அரண்மனை வளாகத்தில் தான் சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசு பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.

இந்த அரண்மனையானது நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரால் கட்ட தொடங்கப்பட்டு விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது என்பது பொதுவான கருத்து. மராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டிடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன.

பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டிடக்கலையின் தொழில்நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும் அரண்மனையும் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது.

இது தமிழகத் தொல்லியல் துறையில் பராமரிப்பில் உள்ளது அரண்மனையின் வளாகம் 4 முதன்மையான கட்டிடக்கலங்களை கொண்டதுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை நீதிமன்றம் என இவை அழைக்கப்படுகின்றன.

மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது எட்டு மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடிலும் நான்கு புற சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனை தொள்ளக்காது மண்டபம் என பொதுமக்கள் அழைக்கின்றனர் என்று கருதப்படுகிறது.

தஞ்சையை தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபம் ஆகும். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. இது கோபுர வடிவில் காணப்படுகிறது.

கோபுரத்துக்கு செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை. இதனை ஜார்ஜவா மாளிகை, சதர்மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது. இது ஏழு மாடிகள் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது என்றாலும் தற்போது ஐந்து மாடிகள் மட்டுமே உள்ளது.