கோடை காலத்திற்கு ஏற்றது இந்த கடற்கரை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த விழிஞ்சம் இயற்கை துறைமுகத்தின் அருகில் உள்ளது பூவார் கிராமம். பூவார் என்பது தென்னிந்தியாவின் ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்த கிராமம் கடற்கரை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பூவார் பீச் பயணிகள் இடையே மிகப் பிரபலமானது.

இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தன மரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது. பூவார் கிராமம் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருவதற்கு மூலகாரணம் பூவார் பீச்தான்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாறுபட்ட காட்சியை அளிக்கும் இந்த கடற்கரையின் அமைதியை பெரும்பாலான பயணிகள் விரும்புவார்கள். இந்த கிராமத்திற்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால் சத்தம், கூச்சல் ஏதும் இல்லாத அமைதியான அற்புத சுற்றுலா தளமாக விளங்குகிறது.

பூவார் கடற்கரையையும், கோவளம் கடற்கரையையும் நெய்யார் நதியின் முகத்துவாரம் பிரிக்கிறது. இந்த முகத்துவாரத்தில் கடல், ஏரி மற்றும் நதி என்று மூன்றின் நீரும் ஒன்றாக கலக்கும் அபூர்வ காட்சியையும் காணலாம். பூவார் கிராமத்தில் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் காணலாம்.

இங்கு சூரிய உதயம், அஸ்த்தனம் பார்த்து ரசிகன் அலாவுதியான பயணமாக இருக்கும். இந்தியாவில் முகாலய படை எடுப்பதற்கு இஸ்லாமியத்தை போதித்த பழம் பெரும் பகுதியாக பூவார் கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.