இளம் வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு.. காரணங்களும், தீர்வுகளும்!

முன்பெல்லாம் மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற பிரச்சனைகள் 60 வயதைத் தாண்டிய நபர்களுக்கு மட்டும் தான் இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. 30 வயதை தாண்டிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சர்வசாதாரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

வயதில் மூத்தவர்கள், ஆண்கள் போன்றவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இப்போது இளம் வயது உடையவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனையால் இறந்து போகின்றனர். அதிலும் பெண்களுக்கும் இந்த பிரச்சினை அதிக அளவில் ஏற்படுகிறது.

ஒரு சில வீடுகளில் திடீரென்று நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி மயங்கி விழுந்து, அப்புறம் உயிர் போயிடுச்சு அப்படின்னு சொல்வாங்க. இது போன்ற செய்திகளை நாம் பல இடங்களில் கேட்பதுண்டு. இந்த பிரச்சனையால் நூற்றில் ஒருவர் தான் உயிர் பிழைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.

Also read: இரத்த அழுத்தத்தை இனி இப்படி காணலாம்; இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே…

தற்போதைய வாழ்க்கை முறையினால் இப்படிப்பட்ட கொடுமையான மரணங்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அதிலும் இந்தியாவில் இது அதிகமாகக் தலைதூக்கி வருகிறது. அதிலும் இளம் வயதில் இருப்பவர்களை இது அதிக அளவில் தாக்குகிறது என்பதுதான் சோகமான ஒன்று.

இதய செயலிழப்பு வால்வுகளில் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் தான் இந்த திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் அதிக உடற்பயிற்சி கடுமையாக வேலை செய்வது போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு பிறக்கும்போதே இதயத்தின் தசைகள் சற்று கடினமாக இருக்கும் அப்படி இருப்பவர்களுக்கு எளிதாக மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த தசைகள் கடினமாக இருப்பதால் மூளைக்குச் செல்லும் ரத்தம் சரியாக செல்லாமல் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஒரு சிலருக்கு இதய படபடப்பு அதிகமாக இருந்தாலும் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் வெளியே தெரியாமல் தான் இருக்கும். அதனால் வீட்டில் யாராவது இதய நோயின் காரணமாக மரணம் அடைந்து இருந்தால் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் ஒரு இசிஜி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Also read:நாம் நல்லது என்று நினைத்து செய்யும் தவறான விஷயங்கள்.. உடலுக்கு கேடு விளைவிக்கும் செயல்கள்

அதிலும் உடற்பயிற்சியின் மேல் தீவிர ஆசை இருப்பவர்கள் எடுத்த உடனே வெயிட்டான பொருட்களை தூக்குவது, பல கிலோமீட்டர் ஓடுவது போன்ற வேலைகளில் ஈடுபட கூடாது. முறையான பயிற்சியுடன் தான் இது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். மேலும் வாழைப்பூ, வாழைத்தண்டு, பூசணிக்காய், கத்தரிக்காய், முருங்கை, புடலங்காய் போன்ற உணவுகள் இதயத்தை காக்கும்.

அதிக அளவு அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு உடலுக்கு சத்தான காய்கறிகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை கூடுமான அளவு ஒதுக்குவது நல்லது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை நாம் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

Also read: நாவல் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்.. விதை கூட மருந்தாகும் அதிசயம்!

அதேபோன்று புகைப்பழக்கம், மது அருந்துவது போன்ற பழக்கங்களும் நம் உயிருக்கு ஆபத்தை தருவிக்க கூடும். போதுமான அளவு தூக்கம் இல்லாதது, தீவிர மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினையாலும் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.

இதனால் அமைதியான ஆழ்ந்த உறக்கம், நல்ல உணவுப் பழக்கம் போன்றவற்றில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் வராமல் இருக்க யோகா செய்வது, சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது போன்ற விஷயங்களில் நம் மனதை செலுத்தலாம். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

Comments are closed.