கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் குணங்கள்.. இதை ஃபாலோ பண்ணா உங்க வீட்ல சண்டையே வராது

என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வந்துவிட்டால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதிலும் இப்போதெல்லாம் என்னை கண்டு கொள்வதே கிடையாது என்ற புலம்பல் தான் மனைவியிடம் இருந்து அதிகமாக வரும். இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தான் பல கணவன்மார்களும் தலையை பிய்த்துக் கொள்கின்றனர்.

இதேபோல் உங்கள் வீட்டிலும் அடிக்கடி சண்டைகள் வருகிறதா. அப்போ இந்த கட்டுரை உங்களுக்கானது தான். பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் மனைவியை நீங்கள் இம்ப்ரஸ் செய்யலாம். இதன் மூலம் வீட்டில் உங்களுக்குள் நடக்கும் சண்டையும் முற்றிலும் குறைந்து விடும்.

புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமை

பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரக்கூடிய கணவன் எல்லா விதத்திலும் பெஸ்டாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அந்த வகையில் கணவன்மார்கள் சமுதாயத்தின் முன் ஏதாவது ஒரு விதத்தில் பெருமைப்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா மனைவிக்கும் இருக்கும். அதைக்கேற்றவாறு புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையுடன் இருக்கும் குணத்தை தான் கணவனிடம் இருந்து ஒரு மனைவி எதிர்பார்க்கிறார். இதை முடிந்த அளவு செய்தாலே மனைவி இம்ப்ரஸ் ஆகி விடுவார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

பொதுவாக பெண்களிடம் இருக்கும் ஒரு இயல்பு தவறு யார் செய்தாலும் ஆண்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான். இது ஏதோ ஒரு விதத்தில் அவர்களை சந்தோஷப்படுத்தும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மீது தவறு இருந்தாலும் மனைவியை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்து விடுவார்கள். இப்படி இருக்காமல் தன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்டாலே மனைவி ஐசாக உருகி விடுவார்.

Also read : அம்மியில சட்னியும் அரைக்கணும், ஐபோன் பற்றியும் தெரியனும்.. நவயுக குடும்பத் தலைவிகளின் பாடு

வெளிப்படையாக இருக்க வேண்டும்

எந்த ஒளிவு, மறைவும் இல்லாமல் வெளிப்படையாக இருக்கும் குணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல் கணவன்மார்கள் பயமோ, பதட்டமோ, சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் அதை மனைவியிடம் வெளிப்படையாக காட்டி விட வேண்டும். இது அவர்களுக்கு மனைவியிடம் இருந்து ஒரு பெரிய ஆறுதலை கொடுக்கும்.

காதலிக்க வேண்டும்

காதலிப்பதற்கு வயது ஒரு தடையே கிடையாது. குழந்தைகள் தான் பிறந்து விட்டதே இனிமேல் என்ன இருக்கிறது என்று யோசிக்காமல் கணவன், மனைவி இருவரும் அவ்வப்போது காதலை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதிலும் மனைவிகள் கணவனிடம் இருந்து இதைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் காதலை வெளிக்காட்டும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு இளமையான உணர்வை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

சர்ப்ரைஸ் கொடுப்பது

இது பெண்கள் எதிர்பார்க்கும் முக்கிய குணமாகும். என்னதான் வேலைப்பளு இருந்தாலும் தனக்காக வீட்டில் காத்திருக்கும் மனைவிக்காக கணவன்மார்கள் இதுபோன்ற சர்ப்ரைஸ்களை கொடுக்கலாம். இது தம்பதிகளுக்கு இடையே இருக்கும் காதல் உணர்வை இன்னும் அதிகப்படுத்தும். இதற்கு விலை உயர்ந்த பொருட்களை தான் கொடுக்க வேண்டும் என்று கிடையாது. சாதாரண மல்லிகை பூவே மனைவிகளுக்கு அலாதி பிரியத்தை ஏற்படுத்தும்.

Also read : இயற்கை முறையில் பிங்க் நிற உதடுகளை பெறுவது எப்படி?

மேற்கண்ட இந்த வழிமுறைகளை கணவன்மார்கள் பின்பற்றினால் மனைவியின் புலம்பல்கள் அறவே நின்றுவிடும். இது கணவன், மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தையும் அதிகரிக்கும்.

Comments are closed.