இரத்த அழுத்தத்தை இனி இப்படி காணலாம்; இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே…

தற்போதைய வாழ்வு என்பது டெக்னாலஜிக்களால் சூழ்ந்த வாழ்வு! ஒவ்வொரு தசாப்தத்துக்கும் உலகமானது டெக்னாலஜி மயமாகிக்கொண்டே இருக்கிறது. அவ்வகையில், பல்வேறு விடயங்களையும் கண்டறியும் வகையில் தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இப்படி இருக்கையில் ஒரு கைக்கடிகாரம் நமது இரத்த அழுத்தத்தைக் கண்டறிவது இயல்பா? வியப்பா?

எப்படியும் இதிலென்ன இருக்கிறது இவ்வளவு காலம் இரத்த அழுத்தத்தை கண்டறியும் கைக்கடிகாரத்தை கண்டுபிடித்திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என இரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி அரிது.

இனி அரிது என்ற சொல்லுக்கு விடை கொடுத்துவிடலாம். ஆம், ஸ்மார்ட் வாட்ச் எனப்படும் கைகடிகாரத்தில் நமது இரத்த அழுத்தம் தெளிவாக காண்பிக்கப்படும் வகையில் தயார்செய்யப்பட்டுள்ளது.

Also read: நாம் நல்லது என்று நினைத்து செய்யும் தவறான விஷயங்கள்.. உடலுக்கு கேடு விளைவிக்கும் செயல்கள்

இதயத்துடிப்பு, நடந்த தூரம், கலோரி அளவு, போன்ற சிலவிடயங்களை மட்டுமே இதுவரை அறிந்து வந்த நிலையில், இனி இரத்த அழுத்தத்தையும் கணக்கிடலாம் என்பது பலரிடத்திலும் வியப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஒரு சென்சாருடன் இணைந்து செயல்பட்டு இருதய துடிப்பை முதலில் கணக்கிடும். இந்த இருதய துடிப்பின் மூலமாக நமது ரத்த அழுத்தத்தைக் கணக்கிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகையிலான ஸ்மார்ட் வாட்ச் ஆனது விரைவில் சந்தைக்கு வந்துள்ளது.

இதுவரை வெளிவந்துள்ள இம்மாதிரியான ஸ்மார்ட் வாட்ச்களில் சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி வாட்ச் 4 என்ற ஸ்மார்ட் வாட்ச் ரத்த அழுத்த அளவு, சீரற்ற இதய துடிப்பு உள்ளிட்டவற்றை கண்டறிந்து துல்லியமாக உணர்த்துகிறது என்று கூறப்படுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை காட்டும். அதோடு முழு உடல் செயல்பாட்டையும் இது அளவிடும். இவற்றின் மூலம் நாம் எந்த அளவுக்கு உடற்தகுதியுடன் உள்ளோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

தூக்க செயல்பாடு உள்ளிட்டவற்றையும், குறட்டை விடுவது போன்றவற்றையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் உணர்த்தும். இதில் 16 ஜி.பி. நினைவகம் உள்ளது.

இதனால் விருப்பமான செயலிகளையும், பாடல்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் செயல்படும். கருப்பு, சில்வர், தங்க நிறங்களில் இது கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.30,000.

Comments are closed.