தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

ஒரு சிலருக்கு நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் திடீரென்று நின்று போய்விடும். என்ன காரணம் என்று தெரியாமல் தொழில் முடக்கமாகி, தேவையில்லாத கடன்கள் பெருகுவதற்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் கண் பார்வை அல்லது திருஸ்டி படுதலே முக்கியமாகும்.

அதையடுத்து அதற்கு தகுந்த திருஷ்டி பரிகாரம் செய்தால் அத்தகைய கண் திருஷ்டி அனைத்தும் விலகி, கடன்கள் தீர்ந்து மீண்டும் தொழில் நன்கு சிறப்பாக நடைபெறும். இத்தகைய திருஷ்டிகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த கிழமையில் செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பார்ப்போம்.

பொதுவாக திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும், ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஸ்டி சுத்தி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. திருஷ்டி சுற்றி போடும் பொழுது அனைவரும் நெற்றியில் குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

Also read: பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா.? நாம் அறியாத தகவல்கள்

கிழக்கு திசை நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றிப் போடுவது நல்லது. வீட்டில் உள்ள அனைவரும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் திருஷ்டி சுற்றிப் போடுவது மூலம் உங்களுக்கு இருந்த தடைகள் விலகும், காரியங்களில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமித்த பின், உங்கள் குடும்பத்தாரை அமர வைத்து திருஷ்டி சுற்றிப் போடுங்கள். கிழக்கு நோக்கி அல்லது வீட்டு வாசலை பார்த்தவாறு உட்கார வைத்து பூசணிக்காய், எலுமிச்சை பழம் அல்லது தேங்காய் கொண்டு திருஷ்டி சுத்தி போடுவது மிகவும் நல்லது.

பூசணிக்காயின் ஒரு பகுதியில் லேசாக சதுர வடிவில் வெட்டி அதனுள் குங்குமம், சில்லரை காசுகள் ஆகியவற்றை இடுவதுடன், வீட்டில் இருப்பவர்களையும் அதில் சில்லரை காசுகளை போட சொல்லுங்கள். பிறகு உங்கள் குடும்பத்தினரை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். தேங்காய் மீது சூடம் ஏற்றியும், எலுமிச்சை மீது சூடன் ஏற்றியும் திருஷ்டி கழிக்கலாம். திருஷ்டி சுற்றிய தேங்காயை முச்சந்தியில் உடைக்க வேண்டும். அதேபோல் எலுமிச்சை பழத்தை நான்காகப் பிரித்து நான்கு திசையிலும் வீசி விடுங்கள்.

Also read: பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்

கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக் கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்றுமுறை சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும் பொழுது நம் மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை. சிறிது மண்ணை கையில் எடுத்து திருஷ்டி சுற்றி விட்டு அதில் எச்சிலை மூன்று முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும்.

சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக் கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்றுமுறை சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட்டால் திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்குக் கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு கமறும். இவ்வாறு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் நீங்கள் திருஷ்டி சுற்றி போடுவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள தடைகள் நீங்கி, சுபகாரியங்கள் நடைபெறும். கடன் தொல்லையில் இருந்தும் மீளலாம்.

Comments are closed.