பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா.? நாம் அறியாத தகவல்கள்

நம்மில் பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இருக்காது. மூணு மணி, நாலு மணிக்கெல்லாம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. பேய்கள் நடமாடும் நடுராத்திரி என்றுதான் எண்ணுவோம். அதுமட்டுமின்றி இரவு அதிக நேரம் விழித்திருந்து கைபேசி உபயோகப்படுத்துவதால் சரியான தூக்கம் இல்லாமல் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழுவதால் உடலுக்கு நோய் ஏற்படும். ஆனால் அதிகாலை கண் விழிப்பது மூலமாக நம் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் நடக்கும்.

இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து வெற்றிகளும் வந்து சேரும். அந்த வெற்றியை கொடுக்கும் நேரத்தை தான் வேத புத்தகங்களில் பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளனர். பிரம்ம முகூர்த்தம் என்பது 3 மணி முதல் 5.30 மணி வரை அகும். அதிகாலை சீக்கிரம் எழுவதால் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறி உள்ளார்கள்.

Also read: ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க

இந்த பிரம்ம முகூர்த்தத்தில் சிவன், பார்வதி, மகாலட்சுமி மற்றும் தேவர்கள் சஞ்சரிப்பார்கள். அதனால் சூரிய உதயம் வரும்வரை உறங்கக்கூடாது. பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் என்னவென்றால் இந்த நேரத்தில் எழுவதால் வாழ்க்கையில் நல்ல மாற்றம், நினைத்த காரியம் நிறைவேறுதல், லட்சுமி கடாட்சம் போன்றவை ஏற்படுகின்றன. இந்த பிரம்ம முகூர்த்த நேரம் தோஷம், திதி இல்லாத சுப நேரம் ஆகும். இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டை செய்து அன்று நம் வேலையை செய்யத் தொடங்கினாள் அன்று முழுவதும் வெற்றிதான்.

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். இந்த பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தவர்கள்தான் பலர் கோடீஸ்வரர்களாக வாழ்கின்றனர். அகவே உடல் சுறுசுறுப்பு, ஆரோக்கியம், சுத்தமான காற்று, தியானம், வழிபாடு போன்ற செயல்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். அந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும் மற்றும் உடலிற்கும் உள்ளத்திற்கும் கூட்டத்தை தருவது அதிகாலையில் கண்விழிப்பது தான்.

கண் விழிப்பதால் உடல் சுறுசுறுப்பு அடையும் ஆரோக்கியமாக இருக்கும். சத்தம் இல்லாமலும் பரபரப்பு இல்லாமலும் நாம் தொடங்கும் காரியம் சிறப்பாக முடியும். சுத்தமாக காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியில் நடந்து செல்வதால் சுத்தமான காற்று உடலில் சுறுசுறுப்பை உண்டாக்கி, நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும். காத்தல் தொழில் செய்யும் நான்முகன் ஆகிய பிரம்மா பெயராலே இது பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

Also read: தை அமாவாசையின் சிறப்புகளும், பலன்களும்

உசப் என்னும் பெண் தேவதை இந்த பிரம்ம முகூர்த்தத்தில் தோன்றியது. இந்த தேவதை தோன்றிய பிறகே சூரியன் உதயமாகும். ஆயுர்வேதத்தில் சூரியன் உதிப்பதற்கு 45 நிமிடத்திற்கு முன் எழுவதால் சூரியக் கதிரில் இருந்து வரும் வைட்டமின் டி உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. எனவே காலையில் எழுந்து இப்பேர்ப்பட்ட பழங்களை அனைவரும் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.

Comments are closed.