ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க

இப்போதெல்லாம் நாம் திரும்பும் பக்கமெல்லாம் மருத்துவமனை தான் இருக்கிறது. தடுக்கி விழுந்தாலே மருத்துவமனையில் விழும் அளவுக்கு தெருவுக்கு நான்கு ஹாஸ்பிடல்கள் இருக்கின்றன. ஆனால் முந்தைய காலத்தில் இப்படி எல்லாம் கிடையாது.

வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே நம் முன்னோர்கள் தங்களுக்கு நேரும் உடல் உபாதைகளை நீக்கி கொள்வார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவ குறிப்புகள் இன்றும் கூட நமக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கு திண்டாடி வரும் பெண்களுக்கு மத்தியில் அப்போதெல்லாம் டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வார்கள். மேலும் அன்றைய காலத்தில் பெண்களுக்கு எல்லாம் வீட்டில் இருக்கும் வயதான பாட்டியே பிரசவம் பார்த்து விடுவார்.

Also read: பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்

அதனால் தான் அவர்கள் எங்க காலம் போல் வருமா என்று இன்றும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். அப்படி அவர்கள் பயன்படுத்தி வந்த சில மருத்துவ முறைகளில் மிகவும் அதிசயமான ஒரு மருத்துவமும் இருக்கிறது. அது வேறொன்றும் இல்லை நாம் அன்றாடம் பருகும் தண்ணீர் தான்.

தண்ணீர் எப்படி மருத்துவ குணம் ஆகும் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த தண்ணீரை சுட வைத்து குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. சிலர் வாழ்க்கையைக் கூட இந்த சுடு தண்ணீர் காப்பாற்றி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுடு தண்ணீர் நம் உடலில் உள்ள பல பிரச்சினைகளை தீர்த்து விடும் என்று அன்றைய சித்த மருத்துவர்கள் 100% உறுதிபடுத்தியுள்ளனர். இந்த சுடு தண்ணீர் ஆஸ்துமா, நரம்பு பிரச்சனைகள், கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள், வயிற்றுப் பிரச்சனைகள், பசியின்மை, ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற அனைத்திற்கும் பயனளிக்கும்.

நாம் தினமும் அன்றாடம் காலையில் எழுந்திருத்து இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். ஆரம்பத்தில் காலையில் உங்களால் இரண்டு டம்ளர் அளவுக்கு குடிக்க முடியாது. அதனால் உங்களால் குடிக்க முடிந்த அளவுக்கு குடிக்கலாம்.

அதன் பிறகு 45 நிமிடங்கள் வரை நாம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த சுடுநீர் நம் உடலுக்குள் சென்று நம் உடலில் இருக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். அதாவது புதிதாக பூப்படைந்த பெண்கள், கர்ப்பம் அடைந்த பெண்கள் போன்றவர்களுக்கு ஏற்படும் சில உபாதைகளுக்கு இது நல்ல தீர்வு அளிக்கும்.

Also read: வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமை.. செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் டிப்ஸ்

மேலும் நீண்ட நாளாக இருக்கும் தலைவலி, சர்க்கரை நோய், வலிப்பு, வாதம் போன்ற அனைத்தும் குறிப்பிட்ட சில மாதங்களிலேயே நம்மை விட்டு ஓடிவிடும். இதை ஒன்பது மாதங்களுக்கு தொடர்ந்து பின்பற்றி வந்தோம் என்றால் புற்றுநோய் கூட ஓடிவிடும் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்போதெல்லாம் இள வயதில் சுகர் போன்ற வியாதிகள் வந்து விடுகிறது. அவர்களுக்கு இப்போதிலிருந்தே இந்த பழக்கத்தை நாம் சிறிது சிறிதாக சொல்லிக் கொடுத்தோம் என்றால் அவர்கள் பிற்காலத்தில் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள உதவும்.

அதனால் சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் உடனே டாக்டரை தேடி ஓடுவதை விட்டுவிட்டு இது போன்ற சின்ன சின்ன மருத்துவ குறிப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது காலம் காலமாக நம் தலைமுறைகளை நிச்சயம் காப்பாற்றும்.

Also read: உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்