வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமை.. செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் டிப்ஸ்

கோடைகாலம் வந்துவிட்டாலே பலரும் வீட்டை விட்டு வெளியில் வர பயபடுவார்கள். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் ரொம்பவும் உக்கிரமாக இருக்கும். அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து கொள்வார்கள்.

ஆனால் வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களால் அப்படி இருக்க முடியாது. அப்படி அவர்கள் வெளியில் சென்று வீடு திரும்பும் போது அவர்களின் தோற்றமே மாறி இருக்கும். சொல்லப்போனால் வீட்டில் உள்ளவர்களுக்கே நம்மை அடையாளம் தெரியாத அளவுக்கு வெயில் நம் முகத்தையே கருமையாக மாற்றியிருக்கும்.

இதனால் இளைய தலைமுறையினர் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதிலும் இளம் பெண்கள் முகம், கை என்று அனைத்தையும் துணியால் மறைத்துக் கொண்டு இந்த வேகாத வெயிலில் செல்வார்கள். திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் இப்படி பலரும் முகமூடி கும்பல்களை போன்று திரிந்து கொண்டிருக்கின்றனர்.

Also read: உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்

இப்படி அவதிப்பட்டு வரும் அவர்கள் வீட்டிலேயே தங்கள் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை நிறத்தை போக்க முடியும். அதற்கு பின்வரும் இந்த டிப்ஸ்களை பின்பற்றி வந்தாலே போதும் நாம் ஈசியாக வெயிலின் தாக்கத்தை சமாளித்துவிட முடியும்.

ஒரு கிண்ணத்தில் கேரட் மற்றும் கொய்யாப் பழத்தை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அந்த கலவையை கருமையாக மாறி இருக்கும் முகம், கழுத்தின் பின்பகுதி, கை, கால் போன்றவற்றில் தடவ வேண்டும்.

சுமார் 30 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். அதன்பிறகு வரட்சியை தடுப்பதற்காக ஏதேனும் மாய்ஸ்சுரைசர் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நம் உடலில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.

Also read: உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்

அதேபோன்று சிறிதளவு எலுமிச்சம்பழம் சாறு எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு சந்தன பொடியை நன்றாக கலந்து வெயிலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அதை கழுவ வேண்டும். இதுவும் வெயிலின் மூலம் பாதிக்கப்பட்ட நம் சருமத்திற்கு நல்ல ஒரு தீர்வு கொடுக்கும்.

மேலும் இது போன்ற முறைகளை பயன்படுத்தி வந்தாலும் நாம் ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான அளவு நீரை கட்டாயம் அருந்த வேண்டும். இதேபோன்று கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய இளநீர், நுங்கு, ஜூஸ் வகைகள், கூழ் போன்றவற்றையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வை நீக்கும். இதையெல்லாம் நாம் தொடர்ந்து பின்பற்றி வந்தோம் என்றால் கோடை காலம் என்பது நமக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்காது.

Also read: சிவப்பு நிற பழங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!.. இனிமே அதை வேண்டாம்னு சொல்லாதீங்க