சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்.. முகப்பொலிவுக்கான சூப்பர் டிப்ஸ்

பொதுவாக பெண்கள் அனைவரும் தங்கள் சருமத்தையும் முக அழகையும் பாதுகாக்க நிறைய மெனக்கெடுவார்கள். அதிலும் இன்றைய நவநாகரீக யுவதிகள் பியூட்டி பார்லரே கதி என்று கிடக்கிறார்கள். அதற்காக ஏகப்பட்ட செலவு செய்கிறார்கள்.

இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கும் அழகு நிலையங்கள் கண்கள், புருவம், முகம், தலைமுடி என்று தனித்தனியாக பில் போட்டு காசு பார்க்கின்றனர். இப்படி எந்தவிதமான செலவும் செய்யாமல் வீட்டிலேயே நம் முக அழகை நம்மால் பாதுகாக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் புகை, தூசு போன்றவற்றால் பாதிக்கப்படும் நம் சருமத்தை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அற்புதமான ஒரு பொருள்தான் விளக்கெண்ணெய். விளக்கெண்ணெயா என்று யாரும் முகத்தை சுளிக்க வேண்டாம்.

இதில் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இளம் பெண்கள் பலருக்கும் உதடுகள் பட்டு போன்று இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்று நிறைய ஆசை இருக்கிறது. அதற்கு இந்த விளக்கெண்ணெய் பெரிதும் உதவும். உதடு கருமையாக இருக்கும் பெண்கள் இந்த விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து, உள்ளங்கையில் நன்றாக தேய்க்க வேண்டும்.

Also read: வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமை.. செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் டிப்ஸ்

அப்படி வேகமாக நாம் தேய்க்கும் பொழுது வெண்மையாக க்ரீம் போன்று அந்த எண்ணெயை மாறும். அதை தினந்தோறும் இரவில் படுக்கும் முன்பு நம் உதடுகளில் தடவி வந்தால் கறுமை நிறம் மறைந்து ரோஜா நிறத்தில் உதடுகள் சிவப்பாகும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் நல்லதொரு மாற்றம் கிடைக்கும்.

மேலும் சருமத் துளைகளில் அடைபட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றவும் இந்த எண்ணெய் நமக்கு பயன்படுகிறது. விளக்கெண்ணையை சிறிது சுத்தமான பஞ்சில் நனைத்து முகத்தில் நன்றாகத் தடவவேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

சில பெண்களுக்கு புருவம் அழகாக வில் போன்று இருக்கும். பல பெண்களுக்கு அப்படி ஒரு பாக்கியம் கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் பென்சிலை வைத்து புருவத்தை வரைந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த விளக்கெண்ணெய் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.

Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன் இந்த விளக்கெண்ணையை சிறிது எடுத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். சிறிது நாட்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக அழகாக மாறும்.

இதேபோன்று தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர முகச்சுருக்கம் நீங்கி இளமையான சருமம் கிடைக்கும்.

கருவளையத்தை அவதிப்படும் பெண்கள் ஒரு உருளைக்கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெயைத் தடவி கண்கள் மீது சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இப்படியே சில நாட்கள் செய்து வந்தால் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து கண்கள் மிகவும் பொலிவுடன் காணப்படும்.

Also read: முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

சிலருக்கு வெயிலினால் கழுத்தின் பின்பகுதி, கை, கால் போன்றவற்றில் அதிக கருமை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இந்த விளக்கெண்ணெயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து முகம் கழுத்து கை கால்கள் ஆகியவற்றில் தடவ வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வர வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளை அனைத்தும் மறைந்து முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.