கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸ் டைட்டில் வின்னரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், சிவின் ஆகிய மூவரும் பைனல் வரை வந்தார்கள். இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

ஏனென்றால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே விக்ரமனுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதே போன்று நாட்கள் செல்ல செல்ல சிவினின் நடவடிக்கையும் அனைவரையும் கவர்ந்தது. அதேபோன்று ரசிகர்களின் ஆதரவு, வெறுப்பு என அனைத்தையும் பெற்ற போட்டியாளர் தான் அசீம்.

பிக் பாஸ் வீட்டில் அனைவராலும் வெறுக்கப்படும் ஒரே நபரும் இவர் தான். ஆனால் ஒவ்வொரு முறை நாமினேட் ஆகும் போதும் இவர் எப்படியாவது காப்பாற்றப்பட்டு விடுகிறார். இதுவே சில விமர்சனங்களை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக இவர் அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அனைத்து விதத்திலும் கண்ணியமாக நடந்து கொண்ட விக்ரமனுக்கு தான் இந்த டைட்டில் கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அதை ஏமாற்றும் வகையில் நடந்த இந்த ட்விஸ்ட் பலரையும் அதிருப்தியாக்கி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் பலரும் விஜய் டிவியின் இந்த முடிவுக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நேர்மை, நீதி எல்லாம் விஜய் டிவிக்கு கிடையாது என்றும் தங்கள் கோபத்தை வெளிப்படையாக காட்டி வருகின்றனர். அந்த வகையில் அசீம் இந்த டைட்டிலைட் பெற தகுதியானவர் கிடையாது என்ற கருத்தும் இப்போது எழுந்துள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் விக்ரமனுக்கு ஆதரவாக ரசிகர்கள் தங்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.