கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் எதிர்காலத்திற்காக உடல் நலத்தை பேணாமல் ஓடி கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் சுழற்சி முறையிலும் வேலைக்காக பகல் வேலை இரவு வேலை என்று தொய்வில்லாமல் பாடு படுகின்றனர்.

இதனால் அவர்களது உடலும் உள்ளமும் சீக்கிரமே தொய்வடைந்து விடுகிறது. அன்று குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள் எப்பொழுதும் வெளியிலே விளையாண்டு கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றைய குழந்தைகள் எப்பொழுதுமே டிவி அல்லது மொபைலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒவொருவருக்கும் தூக்கம் என்பது உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் தூங்காமல், இரவில் நேரம் கழித்து உறங்குவதும், கணினி மற்றும் கை பேசியில் அதிக நேரத்தைக் கழிப்பது கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுத்துகிறது.

Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ்

பொதுவாக தினசரி 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு கருவளையம் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். அது மட்டுமல்ல, கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் அரிப்பு ஏற்படும். இதனால் மேலும் கண்களை அதிகமாக கசக்குவதால் நமது கண்களுக்குக் கீழ் உள்ள மிகவும் மெல்லிய தோல் சோர்வாகி கருப்பு நிறத்திற்கு மாறுகிறது.

இந்த கருவளையத்தை நமது உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களால் வீட்டிலேயே எளிய முறையில் சரி செய்து விடலாம். உங்களது குழந்தைகளுக்கும் டிவி, மொபைல் போன்ற வற்றை கொடுக்காமல் இப்பொழுதே நல்வழி படுத்துங்கள்.

பணம் அனைவருக்கும் தேவைதான் அது போல நமது உடல் நலமும் முக்கியம். தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி முக்கியம் அதை போல தண்ணீர் அளவும் தகுந்தால் போல அருந்தி வரவும். வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் வழக்க மாக்குங்கள்

சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு வரலாம். சிலருக்கு சத்துக் குறைவினால் கண்களில் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்க வழக்க முறைக்கு மாறுவது இதற்கான தீர்வாக இருக்கும்.

Also read: சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்.. முகப்பொலிவுக்கான சூப்பர் டிப்ஸ்