எடை இழப்பிற்கு பூண்டு மிக மிக உதவும் என்பதும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் என்றும் அறியப்படுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்க இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மேலும் இரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதய நோய் குறைப்பதிலும் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பூண்டில் வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C, ஃபைபர், மாங்கனீசு, கால்சியம் போன்ற முக்கியமான சத்துக்களை கொண்டுள்ளது.
பூண்டின் உள்ள ஊட்டச்சத்து:
கலோரிகள் – 306
கொழுப்பு – 13.8
சோடியம் – 617 மிகி
கார்போஹைட்ரேட் – 14 கிராம்
புரதம் – 35.2 கிராம்
இரும்பு – 22%
எடை இழப்புக்கு பச்சை பூண்டு பயனுள்ளதா?
பூண்டை நாம் சமையலுக்கு மட்டும்தான் என்று இருப்போம். ஆனால் பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் பூண்டை சாப்பிட்டால் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது மன அழுத்தமும் குறைகிறது.
Also read: சிவப்பு நிற பழங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!.. இனிமே அதை வேண்டாம்னு சொல்லாதீங்க
செரிமானம் சீராகும், நீரழிவு நோயை குணமாக்கும், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும், காச நோயை குணமாகும். இதயம் மற்றும் கண் ஆரோக்யத்திற்கும் பெரிதும் துணை நிற்கின்றது.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் பூண்டை சாப்பிடுவது ரொம்ப நல்லது சிறு நீர் தொற்றிலிருந்து விடு படலாம். பூண்டில் உள்ள மருத்துவ குணங்களால் நமது ஆயுளும் கூடுகிறது.
பூண்டில் நிறைய ஆரோக்கியமான மற்றும் சத்தான பொருட்கள் உள்ளன. இது கூடுதல் எடையை குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் தீவிர உடற்பயிற்சியுடன் இதை உட்கொள்ளும் போது, சிறந்த பலனைத் தருகிறது.