செலவே இல்லாமல் உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?.. வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதும்.

வெயிலில் அலைந்து உங்கள் முகம் பொலிவிழந்து இருக்கிறதா. அதற்கு நமது வீட்டில் இருக்கும் இந்த மூன்று வகையான பொருட்களை போட்டாலே போதும். உங்க முகம் பட்டு போல் ஜொலி ஜொலிக்கும். அது என்னவென்று அறிய ஆவலாக இருக்கீர்களா?

தேவையான பொருட்கள்:

கடலை மாவு 2 ஸ்பூன்
தயிர் 1 ஸ்பூன்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 ஸ்பூன்.

Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ்

செய்முறை:

ஒரு பவுலை எடுத்து அதில் இந்த 3 வகையான பொருட்களையும் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும். பிறகு முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த மிக்ஸ் செய்து வைத்த பேக்கை நன்றாக முகத்தில் தடவ வேண்டும். பிறகு தடவிய பேக் நன்றாக காய வைக்க வேண்டும். காய்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

பிறகு உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் முகம் ஜொலி ஜொலிக்கும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செய்து வர உங்கள் முகம் என்றும் இளமையுடன் இருக்கும்.

Also read: கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?