முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ்

தங்களது முக அழகை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைத்து மனிதர்களுக்கும் இயல்பானதுதான். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் கொண்டவர்கள். மிக விலை உயர்ந்த கிரீம்கள் (Creams), ஃபேஸ் வாஷ் (facewash) போன்றவற்றை பயன்படுத்தி அதில் தோல்வி கண்டவர்கள் அதிகம்.

பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் காணப்படும்.

இத்தகைய சரும பிரச்சனைகளை தடுக்க இயற்கையிலேயே, அதுவும் நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிமையாக செய்யலாம்.

Also read: முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

அந்தவகையில் முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அற்புத பொடி ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

குறிப்பு:-
• ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் பொடியை அரைத்து பயன்படுத்தலாம்.
• இந்த அற்புத பொடியைப் பயன்படுத்தும் போது க்ரீம், சோப்பு போன்ற வகைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் பலன் தெரியும்.

தேவையான பொருள்கள்

சந்தனம் பொடி – அரை டம்ளர்
கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி
கோரைக்கிழங்கு – 50 கிராம்,
மகிழம்பூ பொடி– 50 கிராம்.
வெந்தயம் -25 கிராம்
உலர்ந்த பன்னீர் இதழ்– மூன்று டம்ளர்
பாசிப்பயறு – ஒரு டம்ளர்

தயாரிக்கும் முறை:

முதலில் இவை அனைத்தையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி மிக்ஸியில் அரைத்து பாட்டிலில் வைத்து கொள்ளுங்கள்.

தினமும் குளிக்கும் போது இந்த பொடியுடன் எலுமிச்சை, கற்றாழை, பால், தயிர், தண்ணீர் என்று ஏதாவது ஒன்றை சேர்த்து முகத்துக்கு பயன்படுத்துங்கள்.

இந்தப் பொடியை ஃபேஸ் பேக் போன்றும் பயன்படுத்தலாம்.

கோடைக்காலம், பனிக்காலம், மழைக்காலம் என எல்லா காலங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

Also read: பாதங்களை பட்டுப்போல் மென்மையாக வைத்திருக்கும் வழிகள்.. பாத வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க

சிறு பிள்ளைகள் முதல் ஆண், பெண் அனைவரும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.