பாதங்களை பட்டுப்போல் மென்மையாக வைத்திருக்கும் வழிகள்.. பாத வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க

பொதுவாக பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று பாத வெடிப்பு பிரச்சனை தான். இந்த பிரச்சனையால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதிலிருந்து விடுபட சில எளிய குறிப்புகள் உங்களுக்காக.

பப்பாளி பழத்தை நன்கு மசித்து பேஸ்ட் போலாக்கி அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதை வாரத்தில் இரு நாட்கள் செய்து வர நாம் மாற்றத்தை காணலாம்.

மருதாணி இலையை அரைத்து அதை பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இது போல் செய்து வந்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

வெது வெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு அதில் நம் பாதங்களை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் பிரஷ் கொண்டு மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும். பிறகு கால்களை நன்றாக துடைத்துவிட்டு அதில் வேஸ்லின் தடவ வேண்டும். இதை செய்து வந்தால் சீக்கிரமே பித்த வெடிப்பில் இருந்து விடுபடலாம்.

கிளிசரினுடன் ரோஸ் வாட்டரை கலந்து தினமும் அதை பாதங்களில் தடவி வர காலப்போக்கில் நம் கால்களிலுள்ள வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் வெது வெதுப்பான நீரில் நம் பாதங்களை ஊற விட்டு நன்றாக கழுவி பின்னர் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து வந்தால் மாற்றம் கிடைக்கும்.

இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை செய்து பாருங்கள்.

இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு எமது வலைதளத்தை பின் தொடருங்கள்.