பட வாய்ப்புக்காக புது ரூட்டை பிடித்த ஹீரோயின்.. உச்சகட்ட கவர்ச்சியால் ஸ்தம்பித்த திரையுலகம்

அந்த காலத்து நடிகைகள் எல்லாம் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கண்ணியமாக குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நடிகைகள் வாய்ப்புக்காக படு கேவலமான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது இளம் நடிகைகளே மூச்சடைத்து போகும் வகையில் 40 வயதான நடிகை ஒருவர் கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார். தமிழில் அந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாக அறிமுகமான இந்த நடிகை அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

துரு துருவென்ற பேச்சும், வெறித்தனமான நடிப்பும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அக்கட தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ்நாட்டில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி நடிகையாக இங்கு ஒரு ரவுண்டு வந்த நடிகை சில காலங்கள் பட வாய்ப்பு இல்லாமல் முடங்கி இருந்தார்.

அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகை கணவருடன் வெளிநாட்டுக்கு பறந்து விட்டார். சில வருடங்களுக்குப் பின் மீண்டும் திரும்பி வந்த அவருக்கு வாய்ப்புகள் எதுவும் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

மேலும் போட்டி நடிகைகளின் வரவும் அதிகமாக இருக்கவே அதுவரை குடும்ப பாங்காக நடித்து வந்த அந்த நடிகை இப்போது கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். முன்னணி நடிகைகளை ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் இப்போது சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இணையதளத்தை கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் அந்த முயற்சிக்கு தற்போது நல்ல பலனும் கிடைத்துள்ளது. அதாவது அவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். இதன் மூலம் கல்லா கட்ட நினைத்த நடிகை எவ்வளவு கிளாமராக வேண்டுமானாலும் நடிக்க தயார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் வீட்டை சுற்றி இப்போது இயக்குனர்களின் கூட்டம் காத்து கிடைக்கிறதாம்.