உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

நம் பலரது வீடுகளிலும் நாம் சந்திக்க கூடிய பெரிய பிரச்சனை தான் இந்த கரையான் தொல்லை. அது பார்ப்பதற்கு எறும்பு போல இருக்கும் மற்றும் இந்த கரையானுக்கு இறக்கைகள் இருக்கும். இந்த கரையான்கள் வாழ்வதற்கு ஈரப்பதம் மற்றும் இருண்ட இடம் மட்டும் தேவை.

நம் வீட்டு கதவு, ஜன்னல் போன்ற மரத்தால் செய்யப்பட்ட பொருள் மற்றும் இடங்களில் இந்த கரையான்களை நாம் அதிகம் காணலாம். இந்த கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடங்களையே அழித்து விடும். இதை நம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி அழிப்பது என்பதை இங்கு காண்போம்.

முதலில் நம் வீட்டின் தரைப் பகுதி மற்றும் வெளிப்புறம் பகுதிகளில் சிறு துவாரங்கள் கூட இல்லாமல் நாம் கவனிக்க வேண்டும்.

நமது வீட்டில் இருக்கும் மிளகாய் பொடிக்கு இந்த கரையான்களை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இவற்றை நாம் மரச்சாமான்களின் மீது தூவி விட்டால் கரையான்கள் அழிந்து போவதை நம்மால் பார்க்க முடியும்.

அடுத்து வேப்பிலையை நன்றாக பொடி செய்து கரையான்களின் தூவி விட்டால் அந்த கசப்பின் காரணமாக கரையான்கள் அழிந்து விடும் அல்லது வேப்பிலையை நன்றாக அரைத்து பிறகு அந்த வேப்பிலை தண்ணீரை தெளித்தாலே கரையான்கள் செத்து விடும்.

தேங்காய் எண்ணெய், சூடம் மற்றும் பூண்டு இந்த மூன்று பொருள்களை பயன்படுத்தி கரையான்களை அழிக்க முடியும். முதலில் தேங்காய் எண்ணையை எடுத்து லேசாக சூடுபடுத்திக் கொள்ளவும். பிறகு அந்த எண்ணெயில் கட்டி சூடத்தை எடுத்து கரைத்து கொள்ளவும். அதில் பூண்டை நன்றாக நச்சு போடவும்.

இந்த மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து கரையான் இருக்கும் சுவர், கதவு, மூலை முடுக்குகளில் எல்லாம் பிரஸ் வைத்து அதை அப்ளை பண்ண வேண்டும்.

பிறகு உங்கள் வீட்டு கதவு, சுவர்களில் கரையான் தொல்லை இருக்கவே இருக்காது. இது இல்லத்தரசிகளுக்கானா சூப்பர் டிப்ஸ். இதை உங்கள் வீடுகளில் செய்து பார்த்து மகிழ்ச்சி அடையவும்.