தித்திக்கும் திணை அல்வா செய்வது எப்படி?.. இதுல இவ்வளவு நன்மைகளா!

பொதுவாக சிறுதானியங்கள் என்றால் நம்மில் அனைவரும் சாப்பிடுவதற்கு சிறிது தயங்குவார்கள். அதிலும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் அதில் நமக்குத் தெரியாத எவ்வளவோ நன்மைகள் இருக்கிறது. அப்படிப்பட்ட சிறுதானியத்தில் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • திணை அரிசி – 200 கிராம்
  • வெல்லம்      – 250 கிராம்
  • ஏலக்காய்த் தூள் –  அரை தேக்கரண்டி
  • சுக்கு தூள்  – 2 சிட்டிகை
  • முந்திரி – 10 கிராம்
  • திராட்சை – 10 கிராம்
  • பாதாம் பருப்பு – 10 கிராம்
  • நெய் – 250 கிராம்.

செய்முறை:-

எடுத்து வைத்துள்ள தினை அரிசி மாவில் வெல்லத்தை நன்றாகப் பொடித்து சிறிது சேர்க்க வேண்டும்.

அத்துடன் தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து தோசை மாவு போன்று நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி கரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக விட்டு நன்றாக கிளறவும்.

Also read: நாவல் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்.. விதை கூட மருந்தாகும் அதிசயம்!

இந்த கலவையானது கட்டி சேராமல் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளற வேண்டும்.

சட்டியில் ஒட்டாமல் கிளறி அல்வா பதம் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் பருப்பு, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், திராட்சை இவற்றைத் தூவி இறக்கவும். இப்போது தித்திக்கும் தினை அல்வா நமக்கு ரெடி.

திணை என்ற இந்த சிறு தானியத்தில் புரதச் சத்து, நார்ச் சத்து மற்றும் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது ஆகையால் இது ஒரு குழந்தைகள் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு.

இந்த தினை அரிசியை நாம் குக்கிஸ்கள், தின்பண்டங்கள் பிலாப் போன்று எந்த வகைகளிலும் செய்து சாப்பிடலாம்.

இதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல உணவு ஆகும்.

சமீப காலமாக மக்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளனர். அதனால் அவர்கள் கம்பு, கேழ்வரகு, கோதுமை, தினை போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்பெல்லாம் அதிக அளவு யாரும் விரும்பாத இந்த சிறுதானியங்கள் தற்போது அனைவராலும் விரும்பப்பட்டு வருகிறது.

Also read: புத்துணர்ச்சியை அள்ளிக்கொடுக்கும் காபி.. ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்

இதில் இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை நாம் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களையும் இது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் நோயில்லாத வாழ்க்கையை நாம் அனுபவித்து வாழ முடியும்.