பொதுவாக பல வீடுகளில் பலரும் தூங்கி எழுந்ததுமே தேடுவது இந்த காபியை மட்டும்தான். வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ இந்த காபி மட்டும் இல்லை என்றால் அன்றைய பொழுதே யாருக்கும் ஓடாது. சிலர் படுக்கையை விட்டு எழுந்திருப்பது கூட காபியை குடித்த பின்பு தான்.
அப்படி பலரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் இந்த காபி நம் உடலுக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. காபியை அதிகமாக குடிக்க கூடாது உடலில் பித்தம் அதிகமாகி விடும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உண்மையில் இந்த காபியில் சில ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறது.
காபியில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் போன்ற சில சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதன் மூலம் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் சரி செய்யப்படுகிறது. பொதுவாக இந்த காப்பி நம்முடைய மனநிலை, நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
இது மூளையின் செயல்பாடுகளை தூண்டி நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். சில முக்கியமான வேலைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த காபியை குடிப்பதன் மூலம் நம்முடைய ஆற்றல் திறன் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
சிலர் மிகவும் மந்தமான நிலையில் சோர்வுடன் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்கள் காபி குடிப்பதால் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அதில் இருக்கும் காபின் என்ற பொருள் நாள் முழுவதும் ஒருவரை புத்துணர்வோடு வைத்திருக்க உதவுகிறது.
மூளை, நரம்பு போன்ற பிரச்சினையை சரி செய்யவும் சர்க்கரை நோயை தடுக்கவும் இது உதவுகிறது. இந்த காபி பல்வேறு சுவைகளில் பல வகைகளில் நமக்கு கிடைக்கிறது. அவற்றை மக்கள் பலரும் விரும்பி வாங்கி குடிக்கின்றனர்.
சிலர் கிடைக்கும் இடைவெளியின் போதெல்லாம் இந்த காபி அருந்துவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி இந்த காபியை ஒரு நாளைக்கு எத்தனை முறை அருந்தலாம் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் காபி குடிப்பதால் நம் உடலுக்கு தீங்கு கிடையாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் அளவுக்கு அதிகமாக ஒரு நாளைக்கு காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதிகமாக காபி குடித்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது காபி பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உலகம் முழுவதிலும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதிக அளவு விரும்பி கொடுக்கும் இந்த காபி நமக்கு தேசிய பானம் என்று கூட காபி பிரியர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த காபியின் சுவை மக்களை அடிமையாக்கி வைத்துள்ளது. இருப்பினும் ஆரோக்கியம் தரும் இந்த காபியை அளவுக்கு அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது.