மீதமான சாதத்தில் சுவையான பக்கோடா.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

பொதுவா நம்ம வீட்டுல சாப்பாடு மிச்சம் ஆயிடுச்சின்னா அதை தண்ணி ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கு. ஆனால் அதை சாப்பிட பிடிக்காத சில பேர் மீதமான சாதத்தை கொட்டி விடுவார்கள். ஆனால் இப்படி எதுவும் செய்யாமல் மீதமான சாதத்தில் சுவையான பக்கோடா தயார் செய்வது எப்படின்னு பார்ப்போம் வாங்க..

தேவையான பொருட்கள்:

சாதம் – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

பச்சை மிளகாய் – 2

சோம்பு – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – சிறிதளவு

கடலை மாவு – அரை கப்

கொத்தமல்லி தழை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் எடுத்து வைத்துள்ள சாதத்தை ஒரு கப்பில் போட்டு நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு, கடலை மாவு, சோம்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். என்னை நன்றாக சூடானவுடன் கலந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். அவ்ளோதான் இப்போ நமக்கு சுவையான பக்கோடா ரெடி .

நீங்களும் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் ரெடி பண்ணி சுவையான பக்கோடாவை சாப்பிடுங்கள்.

மேலும் இது போன்று பல வகையான சிற்றுண்டிகளை நாம் எப்படி வீட்டிலேயே செய்வது என்பதை அறிய எமது வலைதளத்தை பின் தொடரவும்.