பத்து நிமிடத்தில் சட்டுனு செய்யக்கூடிய கடலை மாவு போண்டா.. சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி

உங்கள் வீட்டு குழந்தைகள் ஸ்நாக்ஸ் வேண்டுமென்று தினமும் கேட்கிறார்களா. அப்படி என்றால் கடையில் வாங்கும் ஸ்நாக்ஸ் அவ்வளவு நல்லது கிடையாது உடல் நலத்திற்கு அதற்கு நீங்களே தினம் ஸ்நாக்ஸ்னு வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தயார் பண்ணலாம்.

ஸ்கூல், ஆபீஸ் விட்டு டயர்டா வர்றவங்களுக்கு இந்த சூப்பரான ஸ்நாக்ஸ் செஞ்சு குடுத்து அசத்துங்க.

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 300 கிராம்
சோடா உப்பு – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் மூன்று
பச்சை மிளகாய் – 3
அரிசி மாவு 2 டீஸ்பூன்
சோம்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு ,
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் அதிலும் சின்ன வெங்காயம் என்றால் சுவை சற்று அதிகரிக்கும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோடா உப்பு, அரிசி மாவு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது உங்களுக்கு ருசியான சூடான மொறு மொறு போண்டா ரெடி. இது ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் சட்டுனு செய்யக்கூடிய ஒரு ரெசிபியம் கூட.

இதை போன்று இன்னும் பல சுவையான, ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என்பதை அறிய எமது வலைதளத்தை பின் தொடரவும்.