சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்.. இதை செய்தால் கண் எரிச்சல் வரவே வராது

onion tears

வாழ்க்கையில் எதற்கும் கலங்காத மனிதர் கூட இந்த வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் விடுவார்கள். அப்படி பலரையும் கண்கலங்க வைக்கும் இந்த வெங்காயத்தில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் வெங்காயம் இல்லாத சமையலை நாம் எங்கும் பார்க்க முடியாது. மற்ற காய்கறிகளை நறுக்கும் போது வராத கண்ணீர் இந்த வெங்காயம் நறுக்கும் போது மட்டும் வந்து விடுகிறது. இது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா. ஏனென்றால் இந்த வெங்காயத்தில் சல்பர் அதிக அளவில் இருக்கிறது. அதனால்தான் வெங்காயம் … Read more

காரசாரமான கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா.. அசைவ பிரியர்களுக்கான சூப்பர் டிஷ்

அசைவ உணவுகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் விதவிதமான அசைவ உணவுகளை வாங்கி உண்பதே பலருக்கு பொழுதுபோக்காக இருக்கும். இந்த உணவுகள் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றமாதிரி வெவ்வேறு சுவைகளில் நமக்கு கிடைக்கும். சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை போன்றே நண்டும் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு. இந்த நண்டை சூப், குழம்பு, கிரேவி என்று எப்படி வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதில் நண்டு மசாலா எப்படி செய்வது என்று இப்போது காண்போம். தேவையான … Read more

பாகுபலி தாலி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. சென்னையில் எங்கு கிடைக்கும்? என்ன விலை தெரியுமா?

bhagubali-thaali-chennai

நம்ம சென்னையில் நண்பர்களுடன் சென்று கம்மி விலையில் அதிகமான உணவை சாப்பிட இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களா? பொன்னுசாமி ஹோட்டலிர்க்கு சென்று பாருங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் உணவும் மற்றும் விலையும் இருக்கும். சென்னையில் மிகப்பெரியதாய் சாப்பாடு என்றால் அது இந்த பாகுபலி தாலி தான். இந்த பாகுபலி தாலி எங்கு கிடைக்கும் என்று பார்த்தீங்கன்னா, நுங்கம்பாக்கம் ஜெகநாதன் ரோட்டில் பொன்னுசாமி ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் பிரபலமானதற்கு முக்கிய காரணம் இந்த பாகுபலி … Read more

மன மணக்கும் காரப்பொடி மீன் குழம்பு.. இதில் இவ்வளவு நன்மைகளா?

karapodi-meen-kulambu

பொதுவாக மீன் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் உண்டு என்று கேள்வி பட்டிருப்போம். தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிறது. கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக தினமும் நாம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப் பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து நாம் தப்பிக்கலாம். தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம் நமக்கு வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் மிகவும் வலுவாக … Read more

அனைவரும் விரும்பும் சுவையான மாம்பழ ஹல்வா செய்வது எப்படி?

mango-halwa

மாம்பழ சீசன் முழுவதும் மாம்பழம் மட்டுமே சாப்பிட்டால் சில நேரம் நமக்கே போர் அடித்துவிடும். அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். அதனால், குழைந்தைகளுக்கு ஏற்றவாறு இன்னும் இனிப்பாகவும் வித்தியாசமாகவும் வீட்டிலேயே மாம்பழத்தை வைத்து ஹல்வா செய்து கொடுக்கலாம். வித்தியாசமாக இருக்கிறது என்றே சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் மாம்பழ ஹல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மாம்பழ கூழ்- 2 கப் சர்க்கரை- அரை கப் முந்திரி- 10 எண் உலர்ந்த திராட்சை- 10 எண் … Read more

இட்லி தோசை சாப்பிட்டு போரடிக்குதா.. அப்ப இந்த அடை தோசை செஞ்சு பாருங்க!

adaidosai

அடை என்பது நமது பாரம்பரிய உணவு, கேழ்வரகு அடை, கம்பு அடை, கீரை அடை என்று பல விதங்கள் இருக்கிறது. அதில், நமக்கு ஏற்றார்ப் போல், இப்போது தோசை அடை செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரசி – ஒரு கப் உளுந்து – முக்கால் கப் கொண்டைக்கடலை – அரை கப் பாசிப்பருப்பு – கால் கப் துவரம் பருப்பு – அரை கப் கடலைப் பருப்பு – அரை கப் மிளகு … Read more

உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

சில காலங்களுக்கு முன்பு அதாவது நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் கிடைத்த உணவுகள் மிகவும் சுத்தமானவை. கலப்படம் என்ற சொல்லுக்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. அவர்கள் சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இயற்கை உணவுகள் மட்டுமே. அதனால்தான் நம் முன்னோர்கள் அனைவரும் நூறு வயது தாண்டியும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு மிக எளிதாக கிடைத்தது. ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவு … Read more

வில்லேஜ் ஸ்டைலில் காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி?

prawnthokku

அசைவ வகைகளில் மீன், மட்டன், சிக்கன் போன்ற பல வகைகள் இருந்தாலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் இஷ்டமான ஒரு உணவாக இருப்பது இறால் தான். இதை நாம் வறுவல், தொக்கு, மசாலா என்று பல விதங்களில் சமைக்கலாம். அதிலும் கிராமங்களில் இந்த இறாலை பல வெரைட்டிகளில் சமைத்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இப்போது கிராமத்து ஸ்டைலில் நல்ல காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி என்று காண்போம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – கால் … Read more

ஸ்பெஷல் கருப்பு கொண்டை கடலை புலாவ் செய்வது எப்படி.?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு தான் இந்த புலாவ். அதிலும் உடலுக்கு சத்தான கொண்டைக்கடலையில் இதை செய்வது இன்னும் ஆரோக்கியம் தரும். அதை எப்படி செய்வது என்று இங்கு காண்போம். தேவையான பொருட்கள் 24 மணி நேரம் ஊற வைத்த கருப்பு கொண்டை கடலை நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 3 ஸ்பூன் பட்டை -1 ஏலக்காய் -1 பிரிஞ்சி இலை – 1 … Read more