வாழ்க்கையில் எதற்கும் கலங்காத மனிதர் கூட இந்த வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் விடுவார்கள். அப்படி பலரையும் கண்கலங்க வைக்கும் இந்த வெங்காயத்தில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் வெங்காயம் இல்லாத சமையலை நாம் எங்கும் பார்க்க முடியாது.
மற்ற காய்கறிகளை நறுக்கும் போது வராத கண்ணீர் இந்த வெங்காயம் நறுக்கும் போது மட்டும் வந்து விடுகிறது. இது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா. ஏனென்றால் இந்த வெங்காயத்தில் சல்பர் அதிக அளவில் இருக்கிறது. அதனால்தான் வெங்காயம் நறுக்கும் போது இது காற்றில் கலந்து கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
நம் வீடுகளில் வெங்காயம் நறுக்குவதற்கு முன்பு நம் அம்மா வெங்காயத்தை நீரில் போட்டுவைத்து பிறகு வெட்டுவார்கள். இப்படி செய்தால் கண்கள் எரியாது என்று கூறுவதுண்டு. இது முழுக்க முழுக்க உண்மை தான். அதுபோன்று மேலும் சில சின்ன சின்ன வழிகளை நாம் இங்கு காண்போம்.
பொதுவாக வெங்காயம் நறுக்கும் போது வாயில் பபிள்கம் போட்டு மென்று கொண்டே வெட்டினால் கண்கள் எரியாது என்று பலரும் நம்புகின்றனர்.
சிறிது தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கரைத்து அதில் வெங்காயத்தை சிறிது நேரம் போட்டு விட்டு பிறகு நறுக்கினால் கண்ணீர் எரியாது.
அதேபோன்று கூர்மை இல்லாத கத்தியால் வெங்காயத்தை நறுக்கும் போது சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். இதனால் கூட கண் எரிச்சல் அதிகமாகலாம்.
அதனால் நல்ல கூர்மையான கத்தியை பயன்படுத்தினால் வெங்காயம் வெட்டுவது எளிதாக இருக்கும். இதன் மூலம் கண் எரிச்சலும் குறையும்.
வெங்காயம் வெட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அதை ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். பிறகு அதை எடுத்து வெட்டினால் கண் எரிச்சலும் இருக்காது, கண்ணீரும் வராது.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் நாள் சிறிதளவு வினிகரை எடுத்து வெங்காயம் நறுக்கும் பலகையில் தடவி பின்னர் வெங்காயம் வெட்டினால் கண்கள் எரியாது.
இது போன்ற சில டிப்ஸ்களை நாம் பயன்படுத்தினால் வெங்காயம் வெட்டுவது நமக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்காது.