மன மணக்கும் காரப்பொடி மீன் குழம்பு.. இதில் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக மீன் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் உண்டு என்று கேள்வி பட்டிருப்போம்.

தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிறது. கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக தினமும் நாம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப் பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து நாம் தப்பிக்கலாம்.

தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம் நமக்கு வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் மிகவும் வலுவாக இருக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் இருப்பதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து மனநலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.

அதுவும் அசைவ பிரியர்களுக்கு மீன் குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மீனில் கடல் மீன், ஏரி மீன் என்று பல வகைகள் இருந்தாலும் சுவையாக சமைத்தால் வீடே மன மணக்கும். அப்படி காரப்பொடி மீன் குழம்பு எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.

Also read: சாப்பிட்டதும் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா?.. அப்போ இதை செஞ்சு பாருங்க..

தேவையான பொருட்கள்:

காரப்பொடி மீன்
எண்ணெய் தேவைக்கேற்ப
இரண்டு ஸ்பூன் வெந்தயம்
10 சின்ன வெங்காயம்
3 தக்காளி
10 பல் பூண்டு
3 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் உப்பு
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
கருவேப்பிலை, கொத்தமல்லி
1 மாங்காய் (விருப்பம்)

செய்யும் முறை:

முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீனுக்கு ஏற்ற புளியை எடுத்து கரைத்துக் கொள்ளவும். அந்த புளி கரைசலில் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு வெந்தயம், கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். அதன் பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும் அதற்கேற்ற உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதன் பிறகு சுத்தம் செய்த மீனை மற்றும் மாங்காயை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். பிறகு இந்த மீன் குழம்பை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Comments are closed.