ஆரோக்கியம் 

வயிற்று வலிக்கு வீட்டிலேயே பாட்டியின் கை வைத்தியம்…

stomachpain

வயிற்று வலி என்பது வயிறு முழுமையாக வலிப்பதில்லை. மேல் வயிறு, அடி வயிறு, தசை இழுத்து பிடித்து வலிப்பது உள்ளிட்ட எல்லா வகையும் அடங்கும்.

பொதுவாகவே நமது பாரம்பரிய முறைப்படி பாட்டி வைத்தியமான கைவைத்தியமே போதுமானது.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிகவும் எளிமையாக சரி செய்யலாம். வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்.

சுத்தமான வெந்தயத்துடன் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, அதை பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பின்பு டம்பளரில் ஒரு தேக்கரண்டி பொடி எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது உப்புச் சேர்த்து தண்ணீர் ஊற்றி தினமும் குடித்து வந்தால் கடுமையான வயிற்று வலி தீரும்…

வயிற்று பொருமல் நீங்க:

தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி ஓமப் பொடியைச் சேர்த்து சிறிது கொதிக்க விட்டு இறக்கி, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக இந்த ஓமப் பொடி நீரை குடித்து வந்தால் வயிற்று பொருமல் நீங்கும்.

சாதம் வடித்த கஞ்சியில், சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து குடித்தால் வயிற்று பொருமல் சட்டென்று நிற்கும்.

வயிறு உப்புசமாக அல்லது கல் போல தோன்றினால்:

காரம், அதிகம் புளிப்பு உள்ளிட்டவற்றை இது மாதிரியான சமயங்களில், தயிர் சாதம், பெருங்காயம், இஞ்சி சேர்த்து தாளித்த மோர் சாதம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலே ஆவியில் நன்றாக வேக வைத்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து, வெது வெதுப்பான நீரை பருகி வர வேண்டும்.

வாயு கோளாறு ஏற்பட்டால், அதனுடன் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Also read: வயதாகுதா உங்களுக்கு! அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க, குறிப்பாக பெண்கள்!

வாய்வு கோளாறு இருப்பின் உலர்ந்த வேப்பம் பூவை சுடு நீரில் சேர்த்து குடித்து வரலாம்.

வாழைப்பழ துண்டுகளுடன் சிறிது பெருங்காயத்தை உள்ளே வைத்து விழுங்கி வந்தால், வாய்வு கோளாறு படிப்படியாக குறைந்து வரும்.

வயிற்று அதிக சூடானால், விளக்கு எண்ணெய் சிறிது எடுத்து தொப்புள் மற்றும் அதை சுற்றி தடவினால் உடனடியாக குறையும்.

அதே போல், வாரத்திற்கு ஒரு முறையாவது உச்சம் தலைக்கு நன்றாக எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். அப்போது உடல் சூடு தணியும்.