வயதாகுதா உங்களுக்கு! அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க, குறிப்பாக பெண்கள்!

உடலை சரிவர பேணுதல் என்பது அனைவருக்குமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களின் உடலை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும், அதிகமான கவனத்தை தங்களின் உடலின் மேல் செலுத்த வேண்டும்.

வயதாகும்போது, ​​​​எலும்பு மற்றும் தசை வலிகள், எடை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன.

பெண்களுக்கு சராசரியாக நாற்பது வயதில் மாதவிடாய் நிற்கத் தொடங்குகிறது. இச்சமயத்தில் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு விரைவாக உடல் எடை குறையும். இச்சமயங்களில், பல பெண்கள் தசை மற்றும் எலும்பு வலி, நரை முடி போன்ற பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.

மாதவிடாய் நின்றப்பிறகு பெண்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த சோர்வை நாம் குறைக்கலாம். உடற்பயிற்சி செய்வது என்பது எளிமையான நடைப்பயிற்சி, ஜாகிங், பைலேட்ஸ் அல்லது ஸ்குவாட்ஸ் பயிற்சி ஆகியவற்றையே செய்ய முயலலாம்.

Also read: கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டையா?.. திருமண உறவை வலுப்படுத்த சில வழிகள்

வயதிற்கு ஏற்ப உடலில் மாற்றம் நேரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றத்தைக் கண்டு பயப்படுவதற்குப் பதிலாக அதை ஒப்புக்கொண்டு உடல்நிலையை பேண வேண்டும். உடற்பயிற்சிகள் எந்த அளவு முக்கியமோ அதே அளவு முறையான உணவு முறையும் அவசியம்.

பாதாம் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இந்த பாதாமானது ஆற்றல் அதிகரிக்கவும், தசை வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் உதவுகிறது. ஆகவே, பாதாம் உணவில் நிச்சயம் தேவை!

பெண்கள், புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமன் செய்யும் சத்தான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உணவைத் தவிர்ப்பதைத் தவிர்க்கவும். உங்கள் உணவில் அதிக முளைவிட்ட, இலைக் காய்கறிகள், பருவகால பழங்கள் மற்றும் இறைச்சியைச் சேர்க்கவும்.

முறையான உணவு முறையை பின்பற்றுங்கள்! ஆரோக்கியமாக வாழுங்கள்!

Comments are closed.