முகத்தில் எண்ணெய் வடிகிறதா?.. எப்படி சரி செய்வது

எண்ணெய் வழியும் முகத்தால் சிலநேரங்களில் முகத்தின் அழகை கெட்டுவிடுகிறது இதனை எப்படி சரி செய்வது?

முகத்தில் சோப்பு போட்டு கழுவி இதற்கு பதில் கடலைமாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.

தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.

முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். காலை எழுந்ததும் வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணை பசை விலகி முகம் பொலிவு பெறும். இனி ஏன் கவலை இதனை தினமும் செய்து பாருங்கள். மாற்றத்தை கண்கூடாக பார்க்க முடியும்.

Also read: சரும அழகை பராமரிப்பதில் உப்பின் பயன் தெரியுமா?

Comments are closed.