வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரித்து வந்தாலே சருமஅழகை மேம்படுத்தலாம். முக்கியமாக உப்பு சரும அழகை மட்டும் இன்றி தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும்.
இங்கு ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம். உப்பு சருமத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமப்பொலிவை அதிகரித்து காட்டும். அதற்கு ½ கப் ஆலிவ் ஆயில், ¼ கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன், முகம், கை, கால் மற்றும் உடலில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.
பேஸ் மாஸ்க் உப்பு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள உதவும். அதற்கு 2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவவும்.
உப்பு ஸ்கால்ப்பில் உள்ள பொடுகை, செதில்களை நீக்கி, ஸ்கால்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு இரண்டு டீஸ்பூன் உப்பை ஸ்கால்பில் படும்படி ஈரமான விரல்களால் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
மஞ்சள் நிறம் உடைய பற்களுக்கு உப்பு ஒரு நல்ல அழுக்கு மற்றும் கறை நீக்கியும் கூட. உப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அத்துடன் இரண்டு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து ஈரமான டூத் பிரஸ் பயன்படுத்தி, பற்களை துவக்க வேண்டும். இதனால் நமது பற்களில் உறைந்து உள்ள மஞ்சள் கரை விரைவில் நீங்கும்.
வாய் துர்நாற்றம் பிரச்சனை இருந்தால், அதை உப்பு கொண்டு எளிதில் போகலாம். அதற்கு ¼ கப் நீரில் ½ டீஸ்பூன் உப்பு மற்றும் ½ டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நங்கு கலந்து நீரால் கழுவ வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
1 Comment