அக்கால ஆரோக்கியம், இன்றைய தலைமுறையிடம் இல்லாதது ஏன்.? ஓர் அலசல்

நமது தமிழர்கள் காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டு உறுதியான உடல் அமைப்பை பெற்றிருந்ததுடன், நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தை காத்து நின்றன.

இப்போது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றியமைத்து விட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றிலேயே கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒதுக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். அதையடுத்து, இன்றைய காலகட்டத்தில் காணாமல் போன நமது பாரம்பரிய உணவுகளை பார்க்கலாம். பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் உணவுத் திட்டம் திட்டத்திலிருந்து விடைபெற்று விட்டன.

நாட்டு சர்க்கரையில் கலந்து தயாரிக்கப்பட்ட பாரம்பரிய கடலை மிட்டாய்களும், தேன் கடலை உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. தட்டை, அடை, சீடை போன்றவைகள் போன இடம் தெரியவில்லை. சின்னச்சின்ன கிராமங்களில் பெட்டிக் கடைகளில் கூட பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Also read: குழந்தைகள் விரும்பும் ஜில் ஜில் ஜிகர்தண்டா.. வீட்டிலேயே செய்வது எப்படி?

உப்பும், மசாலாவும் கலந்து செய்த நாள்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக் கால குழந்தைகள் விரும்பி உண்ணுகின்றனர். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பீட்சா, பர்கர், கொக்கோ கோலா போன்றவைகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு ஆட்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

சத்தான உணவுகளை விட்டுவிட்டு வெறும் சக்கை உணவுகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின்றி பெரும் அவதி அடைகின்றனர். நவதானியங்களை சேர்த்துக் கொள்வதன் காரணமாக, சிறு வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர். நாம் ஒருவருக்கும் நம் பாரம்பரிய பண்டங்களின் சிறப்பை உணர்ந்து அதனை நோக்கி திரும்பி ஆரோக்கியமான அடுத்த தலைமுறையினை உருவாக்க வேண்டியது அவசியம்.

இன்று நமது பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட்ட வருவதால் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினர்களின் ஆரோக்கியத்தை காக்கவும் வேண்டி சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Also read: அதிகமாக அரிசி உணவை சாப்பிடுபவரா நீங்கள்.? கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயங்கள்

Comments are closed.