விக்னேஷ் சிவனுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்.. மௌனம் சாதிக்கும் அஜித்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்துள்ளது. அதை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இப்பொழுது அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து கைநழுவி போய் உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. முதல் முறையாக அஜித்துடன் கூட்டணி சேர இருப்பதால் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

Also read: சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்த அஜித்.. தோல்விகளைக் கடந்து அடைந்த மாபெரும் வெற்றி

மேலும் இப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்க வேண்டும் என்று அவர் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இந்நிலையில் இப்படி ஒரு தகவல் கசிந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி விசாரிக்கையில் தயாரிப்பாளர் தரப்புக்கும் அவருக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு தற்போது அப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கு கொடுக்க இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு நியாயம் வேண்டும் என்று சோசியல் மீடியாவில் போராட்டம் செய்து வருகின்றனர்.

இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த விஷயத்தில் அஜித் தரத்திலிருந்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. எதற்காக அவர் இப்படி மௌனம் சாதிக்கிறார் என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஆனாலும் இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சர்ச்சை இயக்குனரை டீலில் விட்ட டாப் ஹீரோக்கள்.. ஆதரவு கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்

Comments are closed.