மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?

கனவுகள் என்பது நினைவலைகளில் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்ப முடியாத கற்பனை உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும். நாம் உறங்கும் போது நம் மூளை அன்றைய நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கும்.

அவசியமான தகவல்களை நமது நீண்ட கால ஞாபகமாகவும், அவசியமற்றவற்றை ஞாபகத்திலிருந்து அழித்துக் கொண்டிருக்கும். இந்த செயலினால் தான் கனவுகள் ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு விளக்கமாக, ஒருவரின் நிறைவேறாத ஏக்கங்கள் கனவாக வரும் என்றும் கூறப்படுகிறது.

உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு தான் கனவு என்றும் செயல்படுவது உண்டு. அதே சமயத்தில் எண்ணற்ற விஞ்ஞானிகள் டி.என்.ஏ வுக்கு உருவம் கொடுத்து பார்த்தபோது ஒத்துப்போகவில்லை. அப்போது, ஜேம்ஸ் டி.வர்ஷன் என்ற விஞ்ஞானி தான் உறங்கும்போது இரு பாம்புகள் ஒன்றோடு, ஒன்று பின்னிப் பிணைவது போல அந்த கனவை டி.என்.ஏ விற்கு கொடுத்துப் பார்த்தார்.

அதுதான் நாம் காணும் இன்றைய டி.என்.ஏ வடிவம். இப்படிதான் விஞ்ஞானிகளுக்கு வந்த பல கனவுகள் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. இந்நிலையில், மோசமான கனவுகளுக்கு பரிகாரமாக நெற்றி நிறைய திருநீறு பூசி ‘ஓம் நமச்சிவாய’ என்ற மந்திரத்தைச் சொல்லி, துளசி தீர்த்தம் சாப்பிட்டு தூங்கினாலே கெட்ட கனவுகள் வராமல் காக்கலாம்.

Also read: வடக்கே தலை வைத்து ஏன் படுக்கக்கூடாது? நமக்கு தெரியாத அறிவியல் காரணங்கள்