கோயில்களில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது.

அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய எந்திரம் பூமிக்கு அடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது. இப்படி கருவறையினுள் நிரம்பி இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை (பாசிட்டிவ் எனர்ஜி) வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பி இருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும்.

எல்லா கோவில் கருவறையிலும் அணையா விளக்கு ஒன்று எரிந்து கொண்டே இருக்கும். இவை அறையில் நிரம்பி இருக்கும் ஆற்றலை வெளியே உந்தித்தள்ள வைத்திடும். இதே போல கருவறைக்குள் இருக்கக்கூடிய ஆற்றல் இடமிருந்து வலமாக சுற்றுவதாக இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடவுளை இடமிருந்து வளமாக சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதே ஆன்மீக ரீதியாக, நம் மனதில் ஏற்படுகிற அறியாமை என்னும் இருட்டை நீக்கி அருள் வேண்டியே இருட்டாக அமைக்கப் பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.

Comments are closed.