பல்லி கத்தினால் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்வோம் வாங்க

ஏதாவது ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் கவுளி (பல்லி) கத்தினால் நன்மையா? தீமையா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அது பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். நாம் எந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதனைப் பொறுத்து அதற்கான பலன் மாறுபடும். குறிப்பாக கிழமையும், திசையும் இதற்கான பலனில் முக்கியமாக இடம்பிடிக்கின்றன.

உதாரணத்திற்கு, ஞாயிற்றுக்கிழமையில் வடக்கு திசை நோக்கி கவுளி (பல்லி) சொன்னால் ‘தனலாபம்’ என்ற பலன் உண்டாகும். திங்கட்கிழமையில் ஈசான்ய பாகத்தை நோக்கி அதாவது, வடகிழக்கு திசையை நோக்கி கவுளி சொன்னால் திருமணம் தொடர்பான பேச்சு வெற்றி பெறும் என்பது பலன். சனிக்கிழமையில் அதே வடகிழக்கு திசை நோக்கி சொன்னால் கள்வர் பயம், பொருட்கள் திருட்டு போகும் என்று பலன் உரைப்பர்.

இது பற்றிய விரிவான பலன் எல்லா பஞ்சாங்கங்களிலும் தெளிவாக சொல்லி இருப்பார்கள். மேலும் இது போன்ற பலன்கள் தத்தம் அனுபவத்தின் மூலமாக நம் முன்னோர்களால் தொகுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லா ஜோதிடர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையை காண்போம் வாருங்கள். தென்திசையில் இருந்து சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாராம்சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சௌகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் தெரிவிக்கும்.

Also read: எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும்!

பல்லி கிழக்கே சொல்லுமாகில் (அதாவது கத்தும்) அதன் பலன் ராகு கிரகத்தின் சாராம்சத்தை பெற்றிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை இது முன்பே தெரிவிப்பதாக அர்த்தம். அதே கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சொன்னால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம். தென்கிழக்கு திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பேசினால் உடனடியாக கலகம் வரும். இந்த நாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் நமது இல்லத்திற்கு செய்தி வந்தடையும்.

இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை குறிப்பிடும். தென்மேற்கு மூலையாகிய நிருதி திசையில் இருந்து சொன்னால் அதற்கு புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்தி இருக்கும். இதன் காரணமாக இதன் ஜென்மபந்துகள் வருகையும், இனஜென்ம பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும்.

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தி இருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும். இதை மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும். வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

Comments are closed.