எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும் ! எதிரிகளோட தொல்லை நீங்க எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவா நம்முடைய வாழ்க்கையில முன்னேற்றம் அடையும் போது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளையும் நம்ம மேற்கொண்டு தான் வந்துட்டு இருக்கும்.
எதிரிகள் தொல்லை நீங்க:
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும், உங்களுடைய உறவர்களிடமிருந்தும், கண் திருஷ்டியில் இருந்தும், பாதுகாப்பை தேடிக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அதான் இன்றைய காலகட்டத்தில் இருக்குன்னு சொல்லலாம்.
சிலருக்கு முன்னேற்றம் என்பது மிக எளிதில் கிடைக்கும், சில பேருக்கு அந்த முன்னேற்றம் கொஞ்சம் தாமதமாகுதுன்னு கூட சொல்லலாம்.
அதிவிரைவான முன்னேற்றத்தை எவருக்கு கிடைக்கிறதோ அவருக்கு அதே சமயம் அதிவிரைவான சில கஷ்டங்களும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு நிதர்சனமான உண்மையாகவே இருக்குனே சொல்லலாம்.
எதிரிகள் தொல்லை உங்களுடைய கண்ணுக்குத் தெரிந்த தெரியாத எதிரிகள் மூலமாக கூட வரலாம். கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி போன்ற பிரச்சனைகள் மூலமாகவும் கூட வரலாம்.
Also read: எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குதா.. அப்ப உங்க வீட்டுல இத பாலோ பண்ணுங்க
சில சமயங்களில் சீக்கிரமே பணத்தை சம்பாதிப்பவர்கள் அது வீட்டுல எதிர்பாராத சிரமம் ஏற்படுவதை கூட நம்ம நிச்சயம் பார்த்திருப்போம்.
பெரிய பெரிய பணக்காரர்களும், கோடீஸ்வரர்களும் தங்களை எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி போன்றவற்றிலுறுந்து பாதுகாத்துக் கொள்ள சில தந்திரங்களையும் பின்பற்றிட்டு தான் வராங்க. சிலருக்கு இது பற்றி எதுவும் தெரியாமல் கூட இருந்துட்டு வருதே.
உங்களை நீங்களே இவற்றிலுருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சுலபமான பரிகாரத்தை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம்.
எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள உக்கிர தெய்வத்தோட வழிபாடு தான் சிறந்ததாகவே சொல்லப்படுது.
பத்ரகாளியம்மன், அங்காள பரமேஸ்வரி, வனபத்ரகாளியம்மன், மகிஷாசுரமர்த்தினி போன்ற தெய்வங்களோட வழிபாடு செய்வது மிகவும் நல்லதுன்னே சொல்லப்படுது.
அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் ஒரு மண் அகல்விளக்கு சதுர வடிவில் இருக்கவேண்டும்.
எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்:
கருப்பு நிற துணி சிறிய அளவில் இருக்கும் வேப்பங்குச்சி, கற்பூரம் ஒரு துண்டு, வேப்ப எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு இது உங்கள் வீட்டு நிலை வாசற்படிக்கு வெளியே தான் செய்ய வேண்டும் வீட்டிற்குள் செய்யக்கூடாத பரிகாரம் என்பதால் இதை கண்டு யாரும் பயப்பட தேவை கிடையாது.
Also read: கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் குணங்கள்.. இதை ஃபாலோ பண்ணா உங்க வீட்ல சண்டையே வராது
எதிர்மற ஆற்றலை விரட்டுவதற்காக தான் நாம் இந்த பரிகாரத்தையும் செய்கிறோம். ஒரு மண் அகல் விளக்கை வீட்டிற்கு வெளிப்புறத்தில் வைத்துவிட்டு நீங்கள் வைத்திருக்கும் கருப்பு நிற காட்டன் துணியில் சிறு சிறு துண்டுகளாக குச்சிகளை உடைத்துப்போட்டு ஒரு முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த முடிச்சுகளை மண் அகல் விளக்கில் வைத்து அதில் ஒரு கற்பூரத்தை வைத்து வேப்ப எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றி அந்த கற்பூரத்தை பற்ற வைத்து விட வேண்டும்.
எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இதை செய்து பாருங்கள்.