எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குதா.. அப்ப உங்க வீட்டுல இத பாலோ பண்ணுங்க

நம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளும் கணவன்மார்களும் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இந்த பணப் பிரச்சனை. சிலருக்கு எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியாமல் இருக்கும்.

சம்பளம் வாங்கிய சில தினங்களிலேயே அது மொத்தமும் கரைந்து போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை தான் பல வீடுகளில் எதிரொலிக்கிறது. இதற்கு ஆன்மிக ரீதியாக சில தீர்வுகள் இருக்கிறது.

நம் வீடுகளில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்களும் நிலைக்க நாம் இது போன்ற சில ஆன்மீக குறிப்புகள் பின்பற்றுவது சாலச் சிறந்தது. இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் பணப் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகும்.

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க, வாங்க வேண்டும்.

செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம்.

இதன் மூலம் கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

Also read: கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டையா?.. திருமண உறவை வலுப்படுத்த சில வழிகள்

வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

வெற்றிலையை தரையில் வைக்கக் கூடாது.சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக்கூடாது.

எரியும் குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக் கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக் கூடாது.

இதன் மூலம் உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருகும்.

Also read: மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?

Comments are closed.