இனி புற்றுநோய் சிகிச்சை இப்படித்தானா? ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை..

ஆரோக்கியமான செல்களை அப்படியே விட்டு விட்டு கட்டி செல்களை அழிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை முறையை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகளில், ஆன்கோலிடிக் வைரோதெரபி (OV) சிகிச்சை முதலிடத்தில் உள்ளது. ஆன்கோலிடிக் வைரஸ்கள் புற்றுநோய் செல்களைக் கொல்லலாம், அதே நேரத்தில் அருகிலுள்ள ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களை அப்படியே விட்டுவிடுகின்றன. ஆன்கோலிடிக் வைரோதெரபி சிகிச்சை முறையில் வக்ஸினியா எனப்படும் புற்றுநோய் செல்களை கொல்லும் வைரஸ் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வைரஸ் புற்றுநோய் செல்களைக் கொல்லவும் ஆரோக்கியமான செல்களைத் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் புற்றுநோய்க்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்த வைரஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன் விலங்குகள் இடத்தில் மேற்கொண்ட சோதனைகளில், விஞ்ஞானிகள் மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கண்டனர்.

புற்றுநோயைக் கொல்லும் வைரஸை புற்றுநோய் செல்களுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு புற்றுநோய் செல்களை அடையாளம் காண உதவுகிறது. இது உடலின் பலத்தை வலுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்,

மிகவும் மோசமான நிலையில் இருக்கும் புற்றுநோயாளிகள் பாதிக்கப்படும்போது, ஆன்கோலிடிக் வைரோதெரபி சிகிச்சை முறை அவர்களது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படுத்தும். வைரஸை விரட்டுவதற்காக உடலில் புரோட்டீன்கள் உற்பத்தியாகும். இன்டர்ஃபெரான் புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டியூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர் புரோட்டீன், தீய செல்களை அழிக்கும். புற்றுநோய் செல்கள் அழிந்து, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் அவர்களது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது.

இந்த சிகிச்சையின் உண்மைத்தன்மை முழுமையாக அறியப்பட்டு இந்த சிகிச்சை  விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் வளர்ச்சிகள் மனித வாழ்வுக்கு முக்கியத்துவமாக அமைந்து வருவது மக்களிடையே அறிவியல் மீதான நன்மதிப்பை உயர்த்தியுள்ளது.