எதிர்பார்ப்பை எகிற விட்ட தளபதி 67.. ஒட்டுமொத்த நட்சத்திரங்களையும் இறக்கிய லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதை மேலும் தூண்டிவிடும் வகையில் நேற்று முழுவதும் வெளிவந்த அப்டேட்டுகள் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

அதாவது நேற்று தளபதி 67 திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இதற்கு முன்பே பலரும் கணித்தது போன்ற நட்சத்திரங்கள் தான் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், டான்ஸ் மாஸ்டர் ஆக நம்மை கவர்ந்த சாண்டி இந்த படத்தின் மூலம் நடிகராக மாறியுள்ளார்.

இந்த எட்டு நட்சத்திரங்களின் பெயர்களையும் பட குழு அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து இன்றும் எக்கச்சக்கமான ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்று காலை முதலே சோசியல் மீடியாவை ரணகளப்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொடைக்கானலில் ஷூட்டிங் முடித்துள்ள படக்குழு காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தயாராகியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று இந்த படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.