பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட கொடூரமான தண்டனைகள்.. குலை நடுங்க வைக்கும் வரலாறு

பொதுவாக அந்த காலத்தில் அரசர்கள் அனைவரும் நாட்டு மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க சில கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றி வந்தனர்.

அதில் முக்கியமானது தவறு செய்பவர்களுக்கு கொடுக்கும் கொடூரமான தண்டனை தான். நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் அந்த தண்டனைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

கழுவேற்றுதல் பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட மிகக் கொடூரமான தண்டனைகளில் இதுவும் ஒன்று. கழுவேற்றுதல் என்பது தவறு செய்யும் நபரை கூரான முனை கொண்ட ஒரு ஆயுதத்தின் மேல் அப்படியே உட்கார வைத்து விடுவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆயுதம் அந்த நபரின் ஆசனவாய் வழியே உள்ளே சென்று உடலை குத்தி கிழிக்கும். இதன் மூலம் அந்த நபர் கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை அடைந்து உயிரை விடுவார். இந்தியா, சீனா போன்ற இடங்களில் இந்த கொடூரமான தண்டனை நடைமுறையில் இருந்தது.

நசுக்குவது பெயரைக் கேட்டதுமே அனைவருக்கும் புரிந்து இருக்கும். இப்படி ஒரு தண்டனை அந்த காலத்தில் மிகவும் பிரபலமான மரண தண்டனையாக இருந்தது. அதாவது யானையை விட்டு குற்றம் சாட்டப்பட்ட நபரின் தலையை நசுக்குவார்கள். அந்த நபர் இறப்பதற்கு முன்பு மிகக் கொடுமையான வலிகளை சந்திப்பார்கள். அதேபோன்று மார்பில் மிதித்துக்கொள்ளும் நடைமுறையும் இருந்தது. இதன் மூலம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குற்றவாளிகள் மரணம் அடைவார்கள்.

எரித்துக் கொல்வது ரோம், இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த தண்டனை நடைமுறையில் இருந்தது. இது சாதாரணமாக இருக்கும் தண்டனை தான் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நீங்கள் நினைப்பது போன்று கிடையாது.

Also read: உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள்.. சவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உயிரிழப்பு

தண்டனை பெற்ற நபரின் ஒவ்வொரு உறுப்பும் தனித்தனியாக எரிக்கப்படுவது தான் இந்த முறையின் கொடூரம். அதன்படி ஒருவரின் கை, கால், மார்பு, வயிறு என்று ஒவ்வொரு பாகங்களாக எரிக்கப்பட்டு கடைசியில் மரணம் ஏற்படும்.

அறுத்துக் கொல்வது இந்த தண்டனை உலகின் பல பகுதிகளிலும் பின்பற்ற வந்துள்ளது. மிகவும் கொடூரமாக இருக்கும் இந்த தண்டனை மிக வேதனையை கொடுக்கக் கூடியது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபரை தலைகீழாக தொங்கவிடுவார்கள். அதன் பிறகு பெரிய கத்தியை கொண்டு அந்த நபரை இரண்டாக அறுப்பார்கள். இதில் முக்கியமானது தலை துண்டிக்கப்படும் வரை அவர்கள் உயிருடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தூக்கிலிடுவது இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட இந்த தண்டனை மிகவும் கொடுமையானது. குற்றவாளி ஒரு மரக்கட்டையால் கட்டப்பட்டு குதிரையில் இழுத்து வரப்படுவார். அதன் பிறகு அவர் சாகும் வரை தூக்கிலிடப்படுவார். அவர் இறந்ததும் தலை துண்டிக்கப்பட்டு நான்கு துண்டுகளாக வெட்டப்படும். மீதமுள்ள உடல் பாகங்கள் அந்த ஊரில் பல முக்கியமான இடங்களில் வைக்கப்படும். பொதுவாக இந்த தண்டனை ஆண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.

மேற்கண்ட இந்த தண்டனைகளை அந்த காலத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது. இதன் மூலம் குற்றங்கள் குறைவதாக அப்போது நம்பப்பட்டது. இதற்கு பயந்து ஒரு வகையில் குற்றங்களும் குறைந்தது.

இதில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சில கொடூரமான தண்டனைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றை பற்றிய விரிவான செய்திகளை நாம் அடுத்த கட்டுரையில் காண்போம்.

Comments are closed.