உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள்.. சவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உயிரிழப்பு

தற்போது தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி போன்ற பல நகரங்களிலும் இருக்கும் மக்கள் துரித உணவுகளை வாங்கி உண்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற உணவுகள் தற்போது கிராமப்புறங்களில் கூட கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் இந்த வகையான உணவுகளை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஷவர்மா என்ற ஒரு உணவு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. நாம் திரும்பும் பக்கமெல்லாம் பல கடைகளிலும் இந்த உணவு தான் அதிக அளவில் கிடைக்கிறது.

பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிட்டு அலுத்துப் போன மக்கள் இந்த சவ்ரம்மாவின் ருசியில் கிட்டத்தட்ட அடிமையாகவே மாறி போய் இருக்கின்றனர். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கடையின் உரிமையாளர்கள் இதற்கு பல ஆபர்களையும் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

மேலும் இந்த உணவு விதவிதமாக தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஆண்களே இந்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்த இந்த ஷவர்மா தற்போது பள்ளி மாணவர்களிடையே வெகு பிரபலம் ஆகியுள்ளது.

அதனால் தற்போது கேரளாவில் மிகப் பெரிய சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற பகுதியில் துரித உணவகம் ஒன்றில் இந்த சவரம்மாவை சாப்பிட்ட ஒரு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.

மேலும் சிலர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் சிலருக்கு சிக்கன்லா என்ற ஒரு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தற்போது தமிழகத்தில் பல இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் சுகாதாரமற்ற சவ்ரம்மா போன்ற உணவுகளை தயாரித்த பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அங்கிருந்த சிக்கன்களையும் ஆராய்ச்சிக்கு அனுப்பி இருக்கின்றனர்.

வேக வேகமாக இயங்கி வரும் இந்த காலத்தில் பல உணவுகளும் கலப்படம் கலந்து தான் இருக்கின்றது. இதை தடுப்பதற்காக எவ்வளவு போராடினாலும் இதுபோன்ற உயிரிழப்புகளை நம்மால் தடுக்க முடிவதில்லை. தற்போது கேரள மாணவிக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.