உடலுக்கு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் இளநீர்.. கோடைக்கால ஸ்பெஷல்!

பொதுவாக கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியால் பலரும் இந்த இளநீரை எடுத்துக்கொள்வது வழக்கம். கோடைகாலம் மட்டுமல்லாமல் அனைத்து சீசனிலும் மக்கள் இதை விரும்புவார்கள். கிராமப்புறங்களில் தென்னை மரம் இல்லாத வீடுகளே கிடையாது.

அப்படி மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த இளநீர் மூலம் நம் உடலுக்கு தேவையான பல ஆற்றல்கள் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பானமாக இருக்கும் இந்த இளநீரில் ஏகப்பட்ட நீர்ச்சத்துக்கள் கிடைக்கிறது.

இந்த நீரை நாம் தினமும் அருந்தலாம். இதனால் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பருமனாக இருப்பவர்கள் இந்த இளநீரை தொடர்ந்து 60 நாட்கள் அருந்தி வர உடல் எடை குறையும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இது நம் உடலுக்கு தேவையான இன்சுலினை தூண்டுகிறது. அதனால் இதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்ற வதந்தி பரவுகிறது. கடைகளில் விற்கும் மற்ற குளிர்பானங்களை விட இதில் இருக்கும் சர்க்கரையின் அளவு மிகக் குறைவாகத்தான் உள்ளது. அதனால் இந்த இளநீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது தான்.

இதில் செவ்விளநீர் என்ற இன்னொரு வகையும் இருக்கிறது. முடிந்த அளவு அதை குடிப்பது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இதய பிரச்சனை, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்சனைகள் இதனால் கட்டுக்குள் வரும். சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது நிரந்தரத் தீர்வை கொடுக்கும்.

Also read: ஸ்பெஷல் கருப்பு கொண்டை கடலை புலாவ் செய்வது எப்படி.?

இந்த இளநீர் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளை முற்றிலும் குணப்படுத்த வல்லது. அதிலும் சோரியாசிஸ் வியாதி ஏற்படாமல் தடுப்பதில் இது சிறப்பாக பங்கு வகிக்கிறது. இது நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் வியர்வையின் மூலமாக வெளியேற செய்து தூய்மைப்படுத்துவதால் சோரியாசிஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் இந்த இளநீரை வெயில் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். காலை, மாலை போன்ற நேரங்களில் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இப்போதெல்லாம் இந்த இளநீரில் பலவகையான ரெசிபிகள் செய்யப்பட்டு வருகிறது.

மக்களும் இப்போது செயற்கையான குளிர்பானங்களை தவிர்த்து விட்டு இந்த இளநீர், நுங்கு போன்ற இயற்கை விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகையால் இந்த கோடை காலத்தில் இயற்கையான முறையில் நமக்கு கிடைக்கும் அதிக ஆரோக்கியம் கொண்ட இந்த இளநீரை அருந்தி பயன் பெறுவோம்.

Comments are closed.