கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டையா?.. திருமண உறவை வலுப்படுத்த சில வழிகள்

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும் என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். முன்பெல்லாம் கணவன், மனைவிக்குள் ஏதாவது சண்டை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விடுவார்கள். ஆனால் இப்போது அந்த விட்டுக்கொடுத்தல், புரிதல் போன்ற மனப் பக்குவம் இல்லாமல் பல திருமணங்கள் பிரச்சினையில் முடிகிறது.

ஒரு ஆராய்ச்சியில் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று பல திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கு காரணம் கணவன், மனைவி இருவருக்கும் சரியான புரிதல் இல்லாதது தான்.

இதுவே அதிகப்படியான மன அழுத்தத்தை ஏற்படுத்தி பிரிவுக்கு வழிவகுக்கிறது. அதனால் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவு வளர என்ன செய்யலாம் என்று இங்கு காண்போம்.

ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள்

முதலில் மனம் விட்டு பேச தினமும் நேரம் ஒதுக்குங்கள் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள்,தகவல்கள் மற்றும் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும்.,இந்த கால கட்டத்தில் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம்.இதை புரிந்து தினமும் ஒரு வழக்கமான நேரத்தில் திட்டமிடலாம்.

அது சாப்பிட்டவுடன் தூங்குவதற்கு முன் அல்லது காலை தேநீர் அருந்தும் போதும் பேசலாம்.அப்போது நீங்கள் ஒரு நல்ல விஷயம் பற்றியும் அந்த நாள் பற்றிய ஒரு கடினமான விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளலாம் இது இருவருக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கிறது.

Also read: உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை கண்டிப்பாக படியுங்கள் உதவும்!

பேசுவதை கவனியுங்கள்

ஒரு சில வீடுகளில் கணவர், மனைவி பேசிக்கொண்டிருக்கும் போது அதை காதில் கேட்டபடியே செல்போனைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இது நிச்சயம் தவறான ஒன்று. ஒருவர் பேசும் போது மற்றவர் அதை கவனிக்க வேண்டும் இதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

ஒன்றாக சுற்றுலா செல்லுங்கள்

கூட்டுக் குடும்பமாக இருக்கும் வீடுகளில் கணவன், மனைவி இருவரும் தனியாக வெளியே செல்வது என்பது பெரிய விஷயம். அப்படிப்பட்ட வீடுகளில் மனைவி, கணவனுடன் தனியாக நேரத்தை செலவிட விரும்புவார். அதனால் முடிந்தவரை இருவரும் ஒன்றாக இரண்டு, மூன்று நாட்கள் சுற்றுலா போன்று செல்வது உறவை வலுப்படுத்தும். அப்படி இல்லை என்றால் சினிமா பார்க்க செல்வது, இரவு உணவு, ஐஸ்கிரீம் மற்றும் ஒரு லாங் டிரைவ் போன்றவற்றிற்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

உங்கள் காதலை வெளிபடுத்துங்கள்

பெரும்பாலான வீடுகளில் மனைவி தன் கணவன் மீது இருக்கும் காதலை சமையலின் மூலம்தான் வெளிப்படுத்துவார்கள். ஆனால் கணவர்கள் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு அதைப் பற்றி ஒன்றும் கூறாமல் சென்று விடுவது தான் பிரச்சனையே. இது போன்ற சமயங்களில் மனைவியின் சமையலை பாராட்டுவது, சிறிய அணைப்பு, பிடித்ததை கேட்காமலே வாங்கிக் கொடுப்பது போன்றவற்றை செய்து பாருங்கள். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மேலும் கணவன், மனைவி இருவரும் ஒருவரின் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை வெளிக்காட்ட சின்ன முயற்சியாவது செய்ய வேண்டும். அதேபோன்று மனைவிக்கு கணவன் குடும்பத்தினருடன் ஒத்துப்போக முடியாமல் சில நேரங்களில் வெறுப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் கணவன், மனைவிக்கு புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

Also read: கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் குணங்கள்.. இதை ஃபாலோ பண்ணா உங்க வீட்ல சண்டையே வராது

இந்த அனுசரணையான பேச்சு மனைவியை கணவன் குடும்பத்தின் மேல் அன்பு காட்ட செய்யும். இந்த ஒரு விஷயம் சரியாக அமைந்துவிட்டாலே கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

Comments are closed.