தளபதி 67-க்கு தயாரான திரிஷா.. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் போட்டோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. அதை தொடர்ந்து இன்று படத்தின் நாயகி த்ரிஷா ஷூட்டிங்கில் பங்கேற்க படுஜோராக கிளம்பியுள்ளார்.

மிகவும் சாதாரணமாக பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்றது. அதை அடுத்து தற்போது படக்குழு காஷ்மீருக்கு சென்றுள்ளது. அங்கு த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

இதற்காக திரிஷா இன்று சென்னை ஏர்போர்ட் வந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர் கருப்பு நிற பேண்ட்டும், கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருக்கிறார். அத்துடன் மாஸ்க் அணிந்தபடி கெத்தாக அவர் வரும் அந்த போட்டோ அதிக லைக்களை குவித்து வருகிறது.

மாஸ்க் அணிந்தபடி கெத்தாக வரும் திரிஷா 
trisha-daily-vision
trisha-daily-vision

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு படு பிஸியாக மாறி இருக்கும் திரிஷா இந்த படத்தை அடுத்து வேறு திரைப்படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இளவரசி குந்தவை தற்போது படு பிஸியாக மாறி இருக்கிறார்.

1 thought on “தளபதி 67-க்கு தயாரான திரிஷா.. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் போட்டோ”

Comments are closed.