குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிடும் மாம்பழம்.. மருத்துவ குணங்களும், நன்மைகளும்

மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த இந்த மாம்பழம் முக்கனிகளில் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறை சீசனில் மட்டும் தான் இந்த மாம்பழம் நமக்கு கிடைக்கும். அரிதாக கிடைக்கும் இந்த மாம்பழத்தை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்.

கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மாம்பழம் பல வகைகளில் நமக்கு கிடைக்கிறது. அதன்படி மல்கோவா, செந்தூரம், ருமேனியா, பங்கனப்பள்ளி போன்ற பல வகைகள் இருக்கிறது. அதிக சுவை கொண்ட இந்த மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.

வெயில் காலத்தில் நீர்ச்சத்து கொண்ட பழங்களான தர்பூசணி, கிர்ணி பழம், நுங்கு போன்றவை அதிகமாக கிடைக்கும். அந்த வகையில் மாம்பழத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இது ருசிக்கு மட்டுமல்ல பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் இருக்கிறது. அப்படி என்னென்ன நன்மைகள் இந்த மாம்பழத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.

இந்த மாம்பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாக மாறும். தோல் நோய், அரிப்பு போன்றவை நீங்கும்.

சிலருக்கு தீராத தலை வலி பாடாய்படுத்தும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாம்பழ சாறு நல்ல பலன் கொடுக்கும்.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான மண்டலத்தைத் தூண்டி உணவுகளை எளிதில் செரிக்க வைக்க உதவுகிறது.

பல் தொடர்பான பல பிரச்சினைகளுக்கும் இது தீர்வாக அமைகிறது. அந்த வகையில் பல் வலி, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த இது உதவும்.

இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் நமக்கு உதவுகிறது. அதிக அளவு ரத்தம் ஊறுவதற்கும் பயன்படுகிறது.

கண்ணில் ஏற்படும் அரிப்பு, நீர்வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக இருக்கும்.

கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மாம்பழத்தை நாம் தினமும் ஜூஸாக அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

சிலருக்கு இந்த மாம்பழத்தை அப்படியே கடித்து சாப்பிட பிடிக்கும். ஆனால் குழந்தைகளுக்கு ஜில்லுனு ஜூஸ் ஆக இதை குடித்தால் தான் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் இந்த ஜூஸை கடைகளில் வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கலாம்.

இந்த மாம்பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுக்கு உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும் வெயிலினால் ஏற்படும் சோர்வு இல்லாமல் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

Comments are closed.