ஏன் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டம் விட்டால் தான் கும்பத்திற்கு நீரூற்றுகிறார்கள் என்று தெரியுமா?

நம் நாட்டில் எந்த தெய்வத்திற்கு உரிய ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றாலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் விடுகிறதா என்பதையும் முக்கியமாக பார்க்கின்றனர். கருடபகவான் ஆனவர் அவ்வாறு வட்டம் விடாமல் இருந்தால் யாகத்தில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே திருக்கோயில் குடமுழுக்கு வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்? கருடபகவான் ஆனவர் வேதவடிவமானவர், வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருவதுதான் முறையாக கருதப்படுகிறது.

குடமுழுக்கு நடைபெறும் பொழுது அங்கு 6 கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த யாக பூஜைகள் திருப்தியாக இருந்தது என்பதை உணர்த்துவதும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆசி வழங்கவுமே கருடபட்சைகள் கோபுரத்தின் மீது வட்டமிடுகின்றன. கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும், கண்பார்வை குறைபாடுகள் அகலும, பகையும், பிணியும் நீங்கும், செல்வ வளம் கொழிக்கும்.

Also read: இன்றய தலைமுறை தவறவிடும் நம் முன்னோர்களின் வழக்கங்கள்..

பெருமாளை கருட வாகனத்தில் செய்வித்தவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை ஆகும். ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்திரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயமில்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலமாக பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் பறவைகள் வருவது இயற்கை எனவும். அது போல, பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இதுபோன்று கருடன் வருவது மிகவும் இயல்பான விஷயம் என்றும். அது வரவில்லை என்றால் குடமுழுக்கில் ஏதேனும் குறை இருக்கும் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து என்று கூறுகிறார்கள். கும்பாபிஷேகம் செய்ய நல்லநேரம் மற்றும் நல்ல லக்னம் தான் தேவை.

இதையே ஆகமங்களும், ஆலயம் பற்றிய சாஸ்திரங்களும் கூறுகின்றன. எனவே பக்தர்கள் அனைவரும் தங்களுடைய மூடநம்பிக்கையை கலைந்து வடி தெறிந்து முறைப்படி இறைவனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலமும் பயனும் அடைய வேண்டும் என்று கூறுகின்றனர்.

Comments are closed.